Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸ் மட்டும் தான் அடிப்பேன்.. பைனலிலும் அடம் பிடித்து.. டீமை ஜெயிக்க வைத்த நைட் ரைடர்ஸ் வீரர்!

டரூபா : ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 2020 கரீபியன் பிரீமியர் லீக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

அந்த அணி வீரர் டேரன் பிராவோ இறுதிப் போட்டியில் படு நிதானமாக சேஸிங் செய்து பதற்றத்தை அதிகப்படுத்தினார்.

எனினும், தான் ஆடிய அதிக டாட் பால்களை சிக்ஸர் மழை பொழிந்து ஈடுகட்டினார். ஒரு கட்டத்தில் அடிச்சா சிக்ஸ் மட்டுமே என்பது போல ஆடினார்.

செயின்ட் லூசியா ஸ்கோர்

செயின்ட் லூசியா ஸ்கோர்

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் குவித்தது.

விக்கெட்கள்

விக்கெட்கள்

155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி துரத்திய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து மோசமான நிலையில் இருந்தது. வெப்ஸ்டர் 5, செய்பர்ட் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து இருந்தனர்.

பிராவோ நிதான ஆட்டம்

பிராவோ நிதான ஆட்டம்

3.3 ஓவரில் 19 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து இருந்தது அந்த அணி. அப்போது துவக்க வீரர் சிம்மன்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் டேரன் பிராவோ. சிம்மன்ஸ் அதிரடி ஆட்டம் ஆட, பிராவோ நிதான ஆட்டம் ஆடி விக்கெட்டை தற்காத்து வந்தார்.

அழுத்தத்தில் நைட் ரைடர்ஸ்

அழுத்தத்தில் நைட் ரைடர்ஸ்

13 ஓவர்கள் முடிவில் பிராவோ 32 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதில் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். அப்போது அணியின் ரன் ரேட் 6.6 ஆக இருந்தது. வெற்றிக்கான ரன் தேவை ஓவருக்கு 10 ரன்களாக இருந்தது.

பிராவோ அதிரடி

பிராவோ அதிரடி

அதன் பின் அதிரடிக்கு மாறினார் பிராவோ. 14வது ஓவரில் 2 சிக்ஸ், 17வது ஓவரில் 2 சிக்ஸ் அடிக்க போட்டி நைட் ரைடர்ஸ் பக்கம் முழுவதுமாக மாறியது. சிம்மன்ஸ் தொடர்ந்து பவுண்டரி மழை பொழிந்த வண்ணம் இருந்தார்.

சிம்மன்ஸ் ரன் குவிப்பு

சிம்மன்ஸ் ரன் குவிப்பு

18.1 ஓவரில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இருந்தார். டேரன் பிராவோ 47 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்து இருந்தார். அதில் 6 சிக்ஸ், 2 போர் அடக்கம்.

டாட் பால்கள்

டாட் பால்கள்

பிராவோ சிக்ஸர்கள் மூலம் மட்டுமே 36 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 25க்கும் மேற்பட்ட டாட் பால்கள் ஆடி சோதித்த பிராவோ, அதை சிக்ஸர்கள் மூலம் ஈடுகட்டினார். தன் அணியையும் இறுதிப் போட்டியில் அசத்தலாக வெற்றி பெற வைத்தார்.

ட்ரின்பாகோ சாதனை

ட்ரின்பாகோ சாதனை

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் ஆடிய 12 போட்டிகளிலும் வென்று, கோப்பையையும் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் நான்காவது கோப்பை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 11, 2020, 19:29 [IST]
Other articles published on Sep 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+