Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 விக்கெட் அள்ளிய பொல்லார்டு.. இருந்தும் சவாலான டார்கெட் கொடுத்த செயின்ட் லூசியா.. பரபர பைனல்!

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த செயின்ட் லூசியா ஸோக்ஸ் 154 ரன்கள் குவித்தது.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரான் பொல்லார்டு பந்துவீச்சில் அசத்தலாக செயல்பட்டு 4 விக்கெட் வீழ்த்தினார்.

ட்ரின்பாகோ அணி, செயின்ட் லூசியா அணியின் 10 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின. இந்த இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

சுனில் நரைன் காயம்

சுனில் நரைன் காயம்

இந்த முக்கிய போட்டியில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் காயம் காரணமாக பங்கேற்காத நிலையிலும் நைட் ரைடர்ஸ் அணி வலுவாக காட்சி அளித்தது. செயின்ட் லூசியா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் கார்ன்வால் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

செயின்ட் லூசியா ரன் குவிப்பு

செயின்ட் லூசியா ரன் குவிப்பு

அதன் பின் டெயால், பிளட்சர் அதிரடியாக ரன் சேர்த்தனர். 2வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்த நிலையில், டெயால் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து 39 ரன்கள் சேர்த்த பிளட்சரும் வெளியேறினார். அடுத்து சேஸ் 22, நஜிபுல்லா சத்ரான் 24 ரன்கள் சேர்த்தனர்.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

அவர்களுக்கு பின் எந்த பேட்ஸ்மேனும் சரியாக ரன் எடுக்கவில்லை. அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். ட்ரின்பாகோ அணியின் கேப்டன் பொல்லார்டு 4 விக்கெட்கள் வீழ்த்தி மிரட்டினார். 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது செயின்ட் லூசியா.

154 ரன்கள்

154 ரன்கள்

செயின்ட் லூசியா அணி விக்கெட்களை இழந்தாலும் ரன் ரேட் குறையாமல் ரன் சேர்த்ததால் 154 ரன்கள் குவித்தது. பொல்லார்டு 4, அலி கான் 2, பாவாத் அஹ்மத் 2, ஹோசின் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர். ட்ரின்பாகோ அணிக்கு 155 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது செயின்ட் லூசியா.

Story first published: Thursday, September 10, 2020, 22:30 [IST]
Other articles published on Sep 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+