Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னாது அவர் இல்லையா? பைனலில் முக்கிய ஆல்-ரவுண்டர் நீக்கம்.. நைட் ரைடர்ஸ் அணிக்கு பின்னடைவு!

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் முக்கிய வீரர் இல்லாமல் களமிறங்கி உள்ளது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் செயின்ட் லூசியா அணியை எதிர்கொண்டது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ். இந்தப் போட்டியில் செயின்ட் லூசியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்து அரை இறுதிச் சுற்றும் முடிவுக்கு வந்தது. இறுதிப் போட்டிக்கு செயின்ட் லூசியா ஸோக்ஸ் - ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் தகுதி பெற்றன.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலமான அணியாக இருந்தது. அந்த அணியின் ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் முக்கிய வீரராக இருந்தார். பேட்டிங்கில் துவக்க வீரராக இருந்த அவர், சுழற் பந்துவீச்சிலும் தன் அணியை வழிநடத்தினார்.

நரைன் நிலை

நரைன் நிலை

அவர் லீக் சுற்றில் பாதி போட்டிகளில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் வேறு வீரர்களை மாற்றி, மாற்றி ஆட வைத்து சமாளித்து நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணி பலமான அணியாக இருந்ததால் சுனில் நரைன் இல்லாதது லீக் சுற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

அணிக்கு திரும்பினார்

அணிக்கு திரும்பினார்

அரை இறுதிச் சுற்றுக்கு முன் சுனில் நரைன் அணிக்கு திரும்பினார். அரை இறுதியில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அந்த அணி வென்றது. எனினும், இறுதிப் போட்டியில் அவர் நிச்சயம் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

சுனில் நரைன் ஆடவில்லை

சுனில் நரைன் ஆடவில்லை

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரான் பொல்லார்டு டாஸ் நிகழ்வின் போது அணியை அறிவித்தார். அப்போது சுனில் நரைன் ஆடவில்லை என்ற தகவலை கூறினார்.

சிக்கந்தர் ராசா

சிக்கந்தர் ராசா

சுனில் நரைனுக்கு பதில் சுழற் பந்துவீச்சாளர் சிக்கந்தர் ராசா அணியில் இடம் பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அந்த அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. செயின்ட் லூசியா அணி முதல் 10 ஓவர்களில் அதிரடியாக ஆடி 2 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் குவித்தது.

Story first published: Thursday, September 10, 2020, 20:59 [IST]
Other articles published on Sep 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+