Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CPL 2020 Final : வரலாற்று சாதனை.. 4வது கோப்பை வென்ற நைட் ரைடர்ஸ்.. ஸோக்ஸ் போராடித் தோற்றது!

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது கோப்பையை வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி.

பரபரப்பான இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட செயின்ட் லூசியா ஸோக்ஸ் பெரிய அளவில் ரன் குவிக்கும் வாய்ப்பை நழுவ விட்டது.

அதே போல பந்துவீச்சில், நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கடைசி சில ஓவர்களில் சொதப்பி தோல்வி அடைந்தது செயின்ட் லூசியா ஸோக்ஸ்.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் லீக் சுற்று, அரை இறுதி என தொடர்ந்து 11 போட்டிகளில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை இறுதியில் சந்தித்தது டேரன் சமியின் தலைமையிலான செயின்ட் லூசியா ஸோக்ஸ்.

சுனில் நரைன்

சுனில் நரைன்

இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. நட்சத்திர ஆல்-ரவுண்டர் சுனில் நரைன் இல்லாத நிலையில் களமிறங்கியது அந்த அணி. செயின்ட் லூசியா அணி முதலில் பேட்டிங் செய்தது.

செயின்ட் லூசியா பேட்டிங்

செயின்ட் லூசியா பேட்டிங்

அந்த அணியின் கார்ன்வால் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். டெயால் 29, பிளட்சர் 39. ராஸ்டன் சேஸ் 22, நஜிபுல்லா சத்ரான் 24 ரன்கள் சேர்த்தனர். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது செயின்ட் லூசியா ஸோக்ஸ்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. சிக்கந்தர் ராசா மட்டுமே அதிக ரன்கள் கொடுத்து ஏமாற்றம் அளித்து இருந்தார். பொல்லார்டு 4 விக்கெட் வீழ்த்தி மிரட்டினார். ஹோசின் 1, அலி கான் 2, பாவாத் அஹ்மத் 2 விக்கெட் வீழ்த்தினர். டிவைன் பிராவோ ஒரு ஓவர் கூட வீசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்மன்ஸ் - டேரன் பிராவோ

சிம்மன்ஸ் - டேரன் பிராவோ

அடுத்து 155 ரன்களை சேஸிங் செய்த ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் வெப்ஸ்டர் 5, செய்பர்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த துவக்க வீரர் சிம்மன்ஸ் - டேரன் பிராவோ போட்டியை தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

சிம்மன்ஸ் ஒருபுறம் அதிரடி ஆட்டம் ஆட, மறுபுறம் பிராவோ நிதான ஆட்டம் ஆடினார். 7 ஓவர்களில் 69 ரன்கள் தேவை என்ற நிலையில் இருவரும் பந்துவீச்சாளர்களை குறி வைத்து பவுண்டரி அடிக்கத் துவங்கினர். பிராவோவும் அதிரடிக்கு மாறி சிக்ஸ் மழை பொழிந்தார்.

வெற்றி

வெற்றி

அவர்கள் இருவரும் 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து சிறப்பாக ஆடி 18.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டச் செய்தனர். சிம்மன்ஸ் 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். 8 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து இருந்தார். பிராவோ 6 சிக்ஸ், 2 ஃபோர் அடித்து 47 பந்துகளில் 58 ரன்கள் குவித்து இருந்தார்.

சாதனை

சாதனை

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ், இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி பேட்டிங்கில் ரன் குவித்தும், பந்துவீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி தோல்வி அடைந்தது.

Story first published: Friday, September 11, 2020, 17:08 [IST]
Other articles published on Sep 11, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+