Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோல்வியே தெரியாத நைட் ரைடர்ஸ் vs நம்பவே முடியாத வெற்றிகளை குவித்த ஸோக்ஸ்.. பரபர இறுதிப் போட்டி!

டரூபா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிப் போட்டியை எட்டி உள்ளது.

இறுதிப் போட்டியில் இந்த சீசனில் இதுவரை தோல்வியே அடையாத ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி, செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து அரை இறுதிப் போட்டிகளும் நிறைவடைந்து இறுதிப் போட்டி நடக்க உள்ளது. ஆறு அணிகள் மோதிய லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் இரண்டு போட்டிகளில் மோதின.

பத்து போட்டிகளிலும் வெற்றி

பத்து போட்டிகளிலும் வெற்றி

ஒவ்வொரு அணியும் பத்து லீக் போட்டிகளில் ஆடியது. அந்த சுற்றில் பத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி மூன்றாம் இடத்தில் இருந்தது.

அரை இறுதி ஆட்டம்

அரை இறுதி ஆட்டம்

அரை இறுதியில் நைட் ரைடர்ஸ், ஜமைக்கா தலவாஸ் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. செயின்ட் லூசியா ஸோக்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை 55 ரன்களுக்கு சுருட்டி, 4.3 ஓவரில் சேஸிங்கை முடித்து மிரட்டலாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

தோல்வியே அடையாத ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தான் இறுதியில் வெற்றி பெறும் என பலரும் கருதுகிறார்கள். அந்த அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றால், இதுவரை ஒரு சீசனின் அனைத்துப் போட்டிகளிலும் வென்று தோல்வியே சந்திக்காமல் வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெறும் டரின்பாகோ நைட் ரைடர்ஸ்.

சாதாரண அணி இல்லை

சாதாரண அணி இல்லை

செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணியும் சாதாரண அணி இல்லை. கடந்த சில போட்டிகளில் தோல்விகளை வெற்றிகளாக மாற்றியதும், அரை இறுதியில் பந்துவீச்சில் மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது. அந்த அணி லீக் சுற்றில் 92 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.

கோப்பையே வெல்லாத அணி

கோப்பையே வெல்லாத அணி

செயின்ட் லூசியா இறுதிப் போட்டியில் வென்றால் இதுவரை கோப்பையே வெல்லாத அந்த அணி முதன்முறையாக கோப்பை வென்று சாதனை படைக்கும். நைட் ரைடர்ஸ் அணிக்கு இணையாக செயின்ட் லூசியா அணிக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதற்கு அரை இறுதியில் அந்த அணி ஆதிக்கம் செலுத்தியதே ஆதாரம்.

சாதனை

சாதனை

பரபரப்பான இந்த கரீபியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் எந்த அணி வென்றாலும் புதிய சாதனை படைக்கப்படும். சீசன் முழுவதும் தோல்வியே அடையாமல் கோப்பை வெல்லப் போகும் அணியா? முதன் முறையாக கரீபியன் பிரீமியர் லீக் கோப்பை வெல்லப் போகும் அணியா? வெற்றி யாருக்கு?.

Story first published: Thursday, September 10, 2020, 20:36 [IST]
Other articles published on Sep 10, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+