Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிராவோ 50, பொல்லார்டு வெறியாட்டம்.. செம அடி வாங்கிய செயின்ட் லூசியா.. நைட் ரைடர்ஸ் மெகா சாதனை!

டரூபா : கீரான் பொல்லார்டு கடைசி நேரத்தில் மிரட்டலாக ஆடி ரன் குவித்தார். அவர் பந்துவீச்சிலும் கலக்கினார்.

பெரிய இலக்கை சேஸ் செய்ய முடியாமல் செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.

27வது லீக் போட்டி

27வது லீக் போட்டி

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 27வது லீக் போட்டி டரூபா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணிகள் மோதின. ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி தொடர்ந்து தான் ஆடிய எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்தது.

ட்ரின்பாகோ பேட்டிங்

ட்ரின்பாகோ பேட்டிங்

செயின்ட் லூசியா ஸோக்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ட்ரின்பாகோ அணிக்கு சிம்மன்ஸ் - வெப்ஸ்டர் துவக்கம் அளித்தனர். சிம்மன்ஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வெப்ஸ்டர், செய்பர்ட் இணைந்து ரன் குவித்தனர்.

டேரன் பிராவோ அசத்தல்

டேரன் பிராவோ அசத்தல்

வெப்ஸ்டர் 14 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நல்ல பார்மில் இருக்கும் டேரன் பிராவோ மீண்டும் ஒரு அசத்தல் ஆட்டத்தை ஆடினார். செய்பர்ட் 33 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், பிராவோ - பொல்லார்டு அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினர்.

பொல்லார்டு அதிரடி ஆட்டம்

பொல்லார்டு அதிரடி ஆட்டம்

பொல்லார்டு 3 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து 21 பந்துகளில் 42 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார். அவர் சென்ற பின் பிராவோ கடைசி ஓவரின் கடைசி பந்தில் அரைசதம் அடித்து 50 ரன்களில் ஆட்டமிழந்தார். ட்ரின்பாகோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்து இருந்தது.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

செயின்ட் லூசியா அணியின் முகமது நபி, டெயால் மட்டுமே சிறப்பாக பந்து வீசி இருந்தனர். நபி 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். டெயால் 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து இருந்தார். அவர்களுக்கு ஏன் முழுமையாக ஓவர்கள் வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.

செயின்ட் லூசியா பேட்டிங்

செயின்ட் லூசியா பேட்டிங்

176 ரன்கள் என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய செயின்ட் லூசியா அணிக்கு மெலியஸ் - டெயால் துவக்கம் அளித்தனர். மெலியஸ் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெயால் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பிளட்சர் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டம் ஆடி வெளியேறினார்.

ட்ரின்பாகோ வெற்றி

ட்ரின்பாகோ வெற்றி

மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களே எடுத்தனர். நபி 17, நஜிபுல்லா 12, சமி 14, குகெலெஜின் 9 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் செயின்ட் லூசியா அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. ட்ரின்பாகோ அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகன் பொல்லார்டு

ஆட்டநாயகன் பொல்லார்டு

ட்ரின்பாகோ அணியின் பந்துவீச்சில் பொல்லார்டு 3, டிவைன் பிராவோ 2, ஸீல்ஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினர். பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட பொல்லார்டு ஆட்டநாயகன் விருதை வென்றார். ட்ரின்பாகோ அணி தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சாதனை செய்தது.

Story first published: Sunday, September 6, 2020, 10:59 [IST]
Other articles published on Sep 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+