Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுண்டரி மழை பொழிந்த நைட் ரைடர்ஸ்.. மன்றோ, பிராவோ, பொல்லார்டு அதிரடி.. சரண்டர் ஆன பார்படோஸ்!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

CPL 2020: Match 9 | TKR VS BT | Trinbago won by 19 runs | OneIndia Tamil

இந்தப் போட்டியில் கோலின் மன்றோ, கீரான் பொல்லார்டு, பிராவோ அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினர்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் 9வது போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - பார்படோஸ் ட்ரைடன்ட்ஸ் அணிகள் மோதின.

நைட் ரைடர்ஸ் நிதானம்

நைட் ரைடர்ஸ் நிதானம்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பார்படோஸ் அணி முதலில் பந்து வீசியது. துவக்கத்தில் அந்த அணி தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. துவக்க வீரர்கள் சிம்மன்ஸ் 21, சுனில் நரைன் 8 நிதான ஆட்டம் ஆடி ஆட்டமிழந்தனர்.

மன்றோ அரைசதம்

மன்றோ அரைசதம்

அதிரடியாக ஆடிய மன்றோ 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். 50 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து டேரன் பிராவோ, கீரான் பொல்லார்டு ஜோடி சேர்ந்தனர். பொல்லார்டு சிக்ஸராக அடித்து வெளுத்து வாங்கினார்.

சிதற வைத்த ஜோடி

சிதற வைத்த ஜோடி

அதுவரை நிதான ஆட்டம் ஆடி வந்த பிராவோ, கேப்டன் பொல்லார்டு ஆட்டத்தை பார்த்து தானும் அதிரடிக்கு மாறினார். இருவரும் சரமாரியாக ஃபோர், சிக்ஸ் அடித்து சிதற வைத்தனர். 20 ஓவர்களில் நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்தது.

சார்லஸ் அதிரடி துவக்கம்

சார்லஸ் அதிரடி துவக்கம்

டேரன் பிராவோ 54, பொல்லார்டு 17 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து ஆடிய பார்படோஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் அதிரடி துவக்கம் அளித்தார். ஹோப் மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடினார்.

ஹோப் நிதான ஆட்டம்

ஹோப் நிதான ஆட்டம்

சார்லஸ் 33 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். ஹோப் நிதான ஆட்டம் ஆடியதால் ரன் ரேட் சரிந்தது. அவர் 38 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஆண்டர்சன் 2, மேயர்ஸ் 1, கார்ட்டர் 8 என வரிசையாக விக்கெட் சரிந்தது.

ஹோல்டர் - நர்ஸ் போராட்டம்

ஹோல்டர் - நர்ஸ் போராட்டம்

கேப்டன் ஜேசன் ஹோல்டர் - நர்ஸ் இணைந்து அணியை மீட்க போராடினர். 4 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்த ஜோடி போராடியது. எனினும், வெற்றிக்கு அருகே செல்ல முடியவில்லை. நர்ஸ் 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நைட் ரைடர்ஸ் வெற்றி

நைட் ரைடர்ஸ் வெற்றி

ஹோல்டர் 19 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்களில் பார்படோஸ் 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி. அதிரடி அரைசதம் அடித்த மன்றோ ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

Story first published: Monday, August 24, 2020, 10:24 [IST]
Other articles published on Aug 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+