Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி ஓவரில் ட்விஸ்ட்.. கோட்டை விட்ட கயானா.. காப்பாற்றிய பிராவோ.. நைட் ரைடர்ஸ் வெற்றி!

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : 2020 கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ்-க்கு எதிரான முதல் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Recommended Video

Virat Kohli completes 12 years in International Cricket

இந்தப் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 144 ரன்கள் குவித்தது.

அடுத்து சேஸிங் செய்த ட்ரின்பாகோ அணிக்கு சுனில் நரைன், டேரன் பிராவோ கை கொடுத்தனர்.

முதல் டி20 தொடர்

முதல் டி20 தொடர்

கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிக் கிடந்த கிரிக்கெட் உலகம் படிப்படியாக மீண்டு வருகிறது. அதன் ஒஉர் பகுதியாக கரீபியன் பிரீமியர் லீக் தொடர் துவங்கியது. இந்த தொடரின் முதல் போட்டியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.

முதல் போட்டி

முதல் போட்டி

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி மூன்று முறை கோப்பை வென்ற அணி. அந்த அணியில் கீரான் பொல்லார்டு, டிவைன் பிராவோ, சுனில் நரைன் ஆகியோர் இருப்பதால் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்பட்டது.

டாஸ் போட தாமதம்

டாஸ் போட தாமதம்

முதல் போட்டி துவங்கும் முன் மழை பெய்ததால் டாஸ் போட தாமதம் ஆனது. சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்கு பின் போட்டி துவங்கியது. போட்டி ஒரு இன்னிங்க்ஸ்-ற்கு 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. கயானா அமேசான் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் பிரான்டன் கிங் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.

கயானா பேட்டிங்

கயானா பேட்டிங்

சந்தர்பால் ஹேம்ராஜ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ஷிம்ரான் ஹெட்மயர் - ராஸ் டெய்லர் அணியை மீட்டனர். டெய்லர் 21 பந்துகளில் 33 ரன்கள் குவித்து தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹெட்மயர் அபாரம்

ஹெட்மயர் அபாரம்

நிக்கோலஸ் பூரன் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரூதர்போர்டு டக் அவுட் ஆனார். விக்கெட்கள் சரிந்தாலும் மறுபுறம் ஹெட்மயர் நிலைத்து நின்று ரன் குவித்து வந்தார். அவர் ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார்.

படு நிதான துவக்கம்

படு நிதான துவக்கம்

கயானா அணி 17 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது. ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஆடிய ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு படு நிதான துவக்கம் அளித்த சிம்மன்ஸ் 21 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சுனில் நரைன் அதிரடி

சுனில் நரைன் அதிரடி

கோலின் மன்றோ 7 பந்துகளில் 17 ரன்கள் குவித்து வெளியேறினார். டேரன் பிராவோ ஒத்துழைப்பு அளிக்க, சுனில் நரைன் அதிரடி பேட்டிங் ஆடினார். அவர் 4 சிக்ஸர், 2 ஃபோர் அடித்து 28 பந்துகளில் 50 ரன்களை எட்டி ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 5 ரன்கள்

கடைசி ஓவரில் 5 ரன்கள்

அவரது அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் தேவை ஒரு பந்துக்கு ஒரு ரன் என்பதாக மாறியது. எனினும், விக்கெட்களை வீழ்த்தி கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்றது கயானா. கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் இரண்டு பந்துகளில் 2 ரன்கள் எடுத்த ட்ரின்பாகோ அணி, மூன்றாவது பந்தில் டேரன் பிராவோ விக்கெட்டை இழந்தது.

ட்ரின்பாகோ வெற்றி

ட்ரின்பாகோ வெற்றி

கடைசி 3 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் நவீன் உல் ஹக் ஒரு வைடு வீசினார். அதற்கு அடுத்த பந்தில் டிவைன் பிராவோ ஃபோர் அடித்து ட்ரின்பாகோ அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கயானா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ட்ரின்பாகோ.

Story first published: Wednesday, August 19, 2020, 0:54 [IST]
Other articles published on Aug 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+