Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன தம்பி இப்படி பண்ணிட்டீங்க.. 30 லட்சம் போச்சு.. சுளையாக இழந்த இளம் ஆப்கன் வீரர்!

ஜமைக்கா : 2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆட இருந்த இளம் ஆப்கன் வீரர் கயாஸ் அஹ்மது விசா பிரச்சனை காரணமாக அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

அவருடன் மேலும் இரண்டு இளம் ஆப்கன் வீரர்களும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்த தொடரில் ஆடாததால் கயாஸ் அஹ்மது சுமார் 30 லட்சம் ரூபாயை இழந்துள்ளார்.

கரீபியன் பிரீமியர் லீக்

கரீபியன் பிரீமியர் லீக்

2020 கரீபியன் பிரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 18 முதல் துவங்க உள்ளது. அந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இறுதிப் போட்டி செப்டம்பர் 10 அன்று நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்கும் முதல் டி20 லீக் இதுதான்.

வெளிநாட்டு வீரர்கள்

வெளிநாட்டு வீரர்கள்

அந்த தொடரில் முன்னணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுடன் பல வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர். டி20 போட்டிகளில் சிறந்து விளங்கும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் கூட அந்த தொடரில் பங்கேற்க உள்ளனர்.

விசா சிக்கல்

விசா சிக்கல்

அதில் மூன்று ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு கரீபியன் தீவுகளுக்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையிலும் விசா சிக்கல் காரணமாக அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த மூன்று வீரர்களுக்கும் லண்டன் வழியாக செல்ல விசா கிடைக்கவில்லை.

யார் அந்த மூன்று வீரர்கள்?

யார் அந்த மூன்று வீரர்கள்?

ஆப்கானிஸ்தான் சர்வதேச அணியில் இடம் பெற்றுள்ள கயாஸ் அஹ்மது மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகியோருடன் 15 வயது நூர் அஹ்மது ஆகியோர் தான் அந்த மூன்று வீரர்கள். அவர்களில் கயாஸ் அஹ்மது கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் ஆட இருந்தார்.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

கயாஸ் அஹ்மது 30 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருந்தார். தற்போது அந்த தொகையை அவர் இழந்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் ஆட சுமார் 70 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து இருந்தார். அந்த தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த பணத்தையும் அவர் இழந்துள்ளார்.

மற்ற வீரர்கள்

மற்ற வீரர்கள்

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ரஷித் கான், முகமது நபி, ஜாகிர் கான், நஜிபுல்லா சத்ரான், முஜிப் உர் ரஹ்மான், நவீன் உல் ஹக் உள்ளிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் தற்போது ட்ரினிடாட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Story first published: Thursday, August 6, 2020, 21:04 [IST]
Other articles published on Aug 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+