CPL 2024 - 54 பந்துகளில் சதம் விளாசிய Evin Lewis.. கிறிஸ் கெயில் சாதனை முறியடிப்பு
மும்பை : கரேபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின் கிட்ஸ் பேட்ரியாட்ஸ் அணியின் சார்பாக விளையாடிய அதிரடி வீரர் ஈவன் லிவிஸ் 54 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதில் ஒன்பது இமாலய சிக்ஸர்களும் 7 பௌண்டரிகளும் அடங்கும்.
செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பேட்டிரியாட்ஸ் அணி கேப்டன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஈவின் லிவிஸ் மற்றும் கெயில் மெயர்ஸ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் செயின்ட் லூசியா கிங்ஸ் அணியினர் தடுமாறினர். ஈவன் லிவிஸ் 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் மூன்று பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும். மறுமுணையில் கேயில் மெயர்ஸ் அதிரடி விளையாடியதால் பேட்ரியாட் அணி 9.5 ஓவர்கள் எல்லாம் 100 ரன்களை கடந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி ஈவின் லிவிஸ் 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கயல் மெயர்ஸ் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 92 ரன்கள் வெளியேறினார். இதனை அடுத்து இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு இரண்டாவது விக்கெட்டுக்கு கிறிஸ் கெயில் சாட்டவிக் வால்டர் ஜோடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்து இருக்கிறது.
மேலும் t20 வரலாற்றில் சேர்க்கப்பட்ட ஆறாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதன் மூலம் செயிண்ட் லூயிஸ் பேட்டரியாட்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் செயின்ட் லூசியாஸ் கிங்ஸ் அணி விளையாடியது. இதில் கேப்டன் டுபிளசிஸ் இரண்டு ரன்களிலும் ஜான்சன் சார்லஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து செயின்ட் லூசியாஸ் கிங் அணி தடுமாறியது.
இலங்கை அணியின் மனுகா ராஜபக்சா அபாரமாக விளையாடி 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதேபோன்று இங்கிலாந்து அணியின் டின் சில்பார்ட் 27 பந்துகளில் 64 ரன்கள் குவிக்க, டேவிட் வீஸி 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 17 புள்ளி இரண்டு ஓவர்கள் எல்லாம் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.


Click it and Unblock the Notifications