Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிறிஸ் கெயிலின் சிக்சர் சாதனை.. நிக்கோலஸ் பூரான் முறியடிப்பு.. 97 ரன்கள் குவிப்பு, 9 சிக்சர் விளாசல்

மும்பை : வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின் கிட்ஸ் பார்ட்டியாட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரான் 43 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது இமாலய சிக்சர்கள் அடங்கும்.

ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணி நடப்பு சிபிஎல் லீக் தொடரில் மிகவும் பலம் வாய்ந்த ஒரு அணியாக கருதப்படுகிறது. நிக்கோலஸ் பூரான் ,பொலார்ட்,பிராவோ, ஆண்ட்ரூ ரஸில், ஜேசன் ராய், சுனில் நரேன் என்ற பெரிய பட்டாளமே இருக்கிறார்கள்.

cricket nicholas pooran chris gayle

இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் பேட்ரியாட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய நைட் ரைடர்ஸ் அணி ஜேசன் ராய் 6 ரன்களிலும், சுனில் நரேன் 38 ரன்களிலும் ஆட்டம் இழக்க நிக்கோலஸ் பூரான் மற்றும் கேஸி கெர்த்தி ஜோடி அதிரடியாக விளையாடி பாட்ரியாட்ஸ் அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.

இதில் கேஸி கெர்த்தி 35 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இதில் ஒன்பது பவுண்டரி மூன்று இமாலய சிக்சர்கள் அடங்கும். மறுமுனையில் பட்டையை கிளப்பிய நிக்கோலஸ் பூரான் 43 பந்துகளில் 98 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரி, ஒன்பது இமாலய சிக்சர்கள் அடங்கும். இதில் நிக்கோலஸ் பூரான், ஸ்ட்ரைக் ரேட் 225 என்ற அளவில் இருந்தது. இதனால் நைட் ரைடர்ஸ் அணியில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த இன்னிங்ஸில் 9 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் நிக்கோலஸ் பூரான் புதிய உலக சாதனை ஒன்றை படைத்தார்.

உள்ளூர் டி20 மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் நிக்கோலஸ் பூரான் ஒரே ஆண்டில் 139 சிக்சர்கள் விளாசி ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முன்பு கிறிஸ் கெயில் 2015 ஆம் ஆண்டு 135 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக கருதப்பட்டது. தற்போது இதனை ஒன்பது சிகசர்கள் விளாசி நிக்கோலஸ் பூரான் முறியடித்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் டி20 போட்டிகளில் நிக்கோலஸ் பூரான் 1844 ரன்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் ஒரே ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நிக்கோலஸ் பூரான் மூன்றாவது இடத்தில் இருக்கின்றார். 2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் 1946 ஆண்டு அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் அலெக்ஸ் ஹெல்ஸ் இரண்டாவது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் 2036 ரன்கள் அடித்து முகமது ரிஸ்வான் முதல் இடத்திலும் இருக்கிறார்கள். தற்போது ரிஸ்வானின் மற்றும் அலெக்ஸ் ஹெல்ஸ் சாதனை முறியடிக்க நிக்கோலஸ் பூரானுக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.

Story first published: Sunday, September 1, 2024, 17:36 [IST]
Other articles published on Sep 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+