Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

124 மீட்டர் பறந்த சிக்ஸ்.. 21 வயது வெஸ்ட் இண்டீஸ் வீரர் பாரிஸ் மிரட்டல்.. CPLல் ஆடிப்போன வீரர்கள்!

ட்ரினிடாட்: சிபிஎல் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ட்ரினிபாகோ நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரரான ஷக்கரே பாரிஸ் 124 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸ் அடித்து பந்தை தொலைத்துள்ள வீடியோ ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் 19வது லீக் போட்டியில் ஷாய் ஹோப் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை எதிர்த்து ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 76 ரன்காளுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த ரொமாரியோ ஷெப்பர்ட் - ப்ரீடோரியஸ் இணை அதிரடியாக ரன்கள் குவித்தது.

ipl 2025 cpl 2024 shaqkere parris 2024

அதிரடியில் பொளந்து கட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட் 24 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 51 ரன்களும், ப்ரீடோரியஸ் 25 பந்துகளில் 2 பவுண்டரி உட்பட 21 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக கயானா அமேசான் வாரியர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்களை சேர்த்தது. சிறப்பாக பவுலிங் செய்த நரைன் மற்றும் வாக்கர் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் 149 ரன்கள் என்ற இலக்குடன் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் ஷக்கரே பாரிஸ் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மொயின் அலி வீசிய 2வது ஓவரிலேயே சுனில் நரைன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் பாரிஸ் - கேர்டி கூட்டணி இணைந்தது. அப்போது 3வது ஓவரை வீச மோட்டி அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 5வது பந்தில் பாரிஸ் அபாரமாக ஒரு சிக்சரை அடித்தார்.

அந்த பந்து மைதானத்தின் மேற்கூரையை கடந்து சென்று விழுந்தது. இதனை பார்த்த பவுலர் மோட்டி ஒரு நொடி மிரண்டு போனார். இதன்பின் ரீ-பிளேவின் போது அந்த சிக்ஸ் பறந்து சென்ற தூரம் கணக்கிட்ட போது, 124 மீட்டர் என்று தெரிய வந்தது. சிறப்பாக ஆடிய அவர் 29 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் 15 பந்துகளில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 36 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். பாரிஸ் அடித்த 124 மீட்டர் தூர சிக்ஸ் வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடருக்கும் வெஸ்ட் இண்டீஸில் இருந்து ஒரு அதிரடி வீரர் கொண்டு வரப்படுவார்கள். பொல்லார்ட், டுவைன் ஸ்மித், ரஸ்ஸல், சுனில் நரைன், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் வரிசையில் கடந்த சீசனில் ரொமாரியோ ஷெப்பர்ட் சேர்ந்தார். இதனால் அடுத்த சீசனில் ஷக்கரே பாரிஸ் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 19, 2024, 16:42 [IST]
Other articles published on Sep 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+