Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ரா எல்லாம் ஓரம் போங்க! CPL தொடரில் கலக்கும் நாதன் எட்வர்ட்ஸ்..ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே எடுக்குமா?

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் எப்போதும் திறமைக்கு பஞ்சமே இருக்காது. பேட்டிங், பந்துவீச்சு என பல திறமை வாய்ந்த வீரர்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் அந்த வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அதுக்காக விளையாடுவதை விட வெளிநாட்டில் நடைபெறும் டி20 தொடரில் தான் அதிகம் நேரத்தை செலவிடுகிறார்கள்.

அந்த வகையில் தற்போது புதிய கிரிக்கெட் வீரர் ஒருவரை வெஸ்ட் இண்டீஸ் கண்டுபிடித்து இருக்கிறது. கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் தற்போது நைட் ரைடர்ஸ் அணிக்காக நாதன் எட்வர்ட்ஸ் அறிமுகமாகி இருக்கின்றார்.

Nathan Edwards

விளையாடிய மூன்று போட்டிகளில் நாதன் எட்வர்ட்ஸ் ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திருக்கிறார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான நாதன் எட்வர்ட்ஸ், அனல் பறக்கும் விதமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை பதம் பார்க்கிறார்.
இடது கை வேகப்பந்து வீச்சில் அவர் வீசும் போது அந்த பந்தை எதிர்கொள்ள தடுமாறும் அளவுக்கு இருக்கிறது.

இதுபோன்று பேட்டிங்களும் நாதன் எட்வர்ட்ஸ் 8 பந்துகளில் 15 ரன்கள் குவித்திருக்கின்றார். மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஜான்சன் போன்ற தலைசிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கும் வகையில் நாதன் எட்வர்ட்ஸ் திறன் பட செயல்பட்டு இருக்கிறார். மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் எட்வர்ட்ஸ் நிச்சயம் டி20 கிரிக்கெட் தொடரில் மிகப்பெரிய வீரராக வருவார் என கிரிக்கெட் வல்லுனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நைட் ரைடர்ஸ் அணிதான் தற்போது எட்வர்ட்சை கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்து இருக்கிறது. இந்த தருணத்தில் ஐபிஎல் மினி ஏலத்தில் எட்வர்ட்ஸ் தேர்வு செய்ய பல அணிகள் போட்டி போடும் என எதிர்பார்க்கலாம். ஒரு வேலை எட்வர்ட்ஸ், சிஎஸ்கே அணிக்கு வந்தால் சென்னை அணியின் பந்துவீச்சு பலம் மேலும் அதிகரிக்கும்.

ஏற்கனவே பதிரானா அணியில் உள்ள நிலையில் பணியில் சேர்ந்தார். பேட்ஸ்மேன்களுக்கு போதாத காலமாகத்தான் இருக்கும். எட்வர்ட்ஸ் குறித்து பாராட்டியுள்ள பொலார்ட்,தன்னுடைய பந்துவீச்சு மூலம் ரசிகர்களின் இதயத்தை வென்று வருவதாக பாராட்டியுள்ளார். இதனால் நாதன் எட்வர்ட்ஸ் எந்த அணிக்கு விளையாடுகிறாரோ அந்த அணியின் பலம் மேலும் அதிகரிக்கும் என நம்பலாம்.

Story first published: Friday, August 22, 2025, 12:28 [IST]
Other articles published on Aug 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+