Tim seifert: 53 பந்தில் 125 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் செஃபர்ட்.. சிஎஸ்கே மினி ஏலத்தில் வாங்குமா?
செயிண்ட் லூயிஸ்: வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் கரெபியன் பிரீமியர் லீக் தொடரில் நியூஸிலாந்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செஃபர்ட் 53 பந்துகளில் 125 ரன்கள் குவித்து இருக்கின்றார். செயிண்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவர் தொடக்க வீரராக களம் இறங்கி 10 பவுண்டரி, 9 சிக்சர் என 235 ஸ்ட்ரைக் ரேட்டில் 125 ரன்கள் குவித்து இருக்கின்றார்.
முதல் இன்னிங்சில் பால்கான் அணி நான்கு விக்கெட் இழ்ப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி இந்த இலக்கை வெறும் 17.5 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் டிம் செஃபர்ட் மதிப்பு பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டிம் செபர்ட் முதலில் எந்த அணியாலும் ஏலத்தில் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு இறுதி கட்டத்தில் ஆர் சி பி அணிக்காக விளையாடிய ஜேக்கப் போத்தேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட திரும்பியதால் 2 கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக டிம் செஃபர்ட் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் காயம் அடையாத வீரருக்காக தான் டிம் செஃபர்ட் ஆர்சிபி அணிக்கு திரும்பினார் என்பதால் அவரால் அடுத்த சீசனில் ஆர்சிபி அணிக்காக (ஏலத்தில் பங்கேற்காமல்) விளையாட முடியாது. இதன் மூலம் ஏலத்தில் அவர் பங்கேற்று அதிக விலைக்கு செல்லலாம். இந்த தருணத்தில் இதுவரை மூன்று ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கின்றார். தற்போது வரை சிபிஎல் தொடரில் 5 இன்னிங்சில் விளையாடி 277 ரன்கள் அடித்திருக்கின்றார். இதனால் டிம் செஃபர்ட் எந்த ஐபிஎல் அணிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
குஜராத் அணியில் தற்போது சாய் சுதர்சன், கேப்டன் கில் மற்றும் ஜாஸ் பட்லர் என டாப் 3 பேட்டிங் வரிசையில் பலமாக இருக்கின்றது. இந்த தருணத்தில் பட்லருக்கு மாற்று வீரராக டிம் செஃபர்டை குஜராத் அணி ஏலத்தில் எடுக்கலாம். இதன் மூலம் அந்த அணியின் பேட்டிங் பலம் அதிகரிக்கும். இதேபோன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சரியான தொடக்க வீரர்கள் இல்லாமல் அந்த அணி தடுமாறி வருகிறது.
ரஹானே போன்ற வீரர்கள் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் செஃபர்டை அந்த அணி தொடக்க வீரராக பயன்படுத்தலாம். இதனால் ஏலத்தில் செபர்ட்க்கு அந்த அணி அதிக தொகையை செலுத்தலாம். இதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் தொடக்க வீரருக்கான இடம் காலியாகவே உள்ளது. ரச்சின் ரவீந்திரநா, கான்வே என இரண்டு தொடக்க வீரர்களும் இந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அவர்களை நீக்கிவிட்டு டிம் செஃபர்ட்டை அணிக்கு கொண்டு வரலாம்.


Click it and Unblock the Notifications