Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த கிறிஸ் கெய்லுக்கு எப்பப் பார்த்தாலும் இதே வேலையாப் போச்சு!

போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிடாட்: கரீபியன் பிரிமீயர் லீக் போட்டியில் அதிரடியாக சதமடித்து அசத்தியுள்ளார் கிறிஸ் கெய்ல்.

இதுபோன்ற பிரீமியர் லீக் போட்டிகளில் கெய்ல் அதிரடி காட்டுவது புதிதல்ல என்றாலும் கூட அவர் ஒவ்வொரு முறையும் அதிரடி ஆட்டத்தைக் காட்டுவது 100 திருவிழாக்களுக்கு இணையான அதகளத்தைக் காட்டுவதால் ரசிகர்கள் உற்சாகமடைகின்றனர்.

நம்ம ஊர் ஐபிஎல் போல மேற்கு இந்தியத் தீவுகளின் கிரிக்கெட் வாரியம் நடத்துவதுதான் கரீபியன் பிரீமியர் லீக் தொடர். இந்தத் தொடரில் ஜமைக்கா டல்லவாஸ் என்ற அணியின் கேப்டனாக இருக்கிறார் கெய்ல்.

54 பந்துகளில் 108

54 பந்துகளில் 108

கெய்ல் அணிக்கும், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இதில் கெய்ல் அதிரடி காட்டினார். 54 பந்துகளைச் சந்தித்த அவர் 108 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தாறுமாறு

தாறுமாறு

இவரது அதிரடி ஆட்டத்தில் 11 சிக்ஸர்களும், 4 பவுண்டரிகளும் தாறுமாறாக பறந்து ஜமைக்கா அணிக்கு வலவூட்டின. கெய்லின் அதிரடி காரணமாக ஜமைக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

18வது சதம்

18வது சதம்

20 ஓவர் போட்டிகளில் கெய்ல் போடும் 18வது சதம் இது.. ஏதோ ஜஸ்ட் லைக் தட் சாதம் வடிப்பது போல சதம் போட்டுத் தள்ளி வருகிறார் கெய்ல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டிரைக் ரேட் 200

ஸ்டிரைக் ரேட் 200

அவர் சதம் அடிக்காத 20-20 தொடரே இல்லை என்று கூறும் அளவுக்கு அவரது அதிரடியும் தொடர்கிறது. நேற்றைய போட்டியில் கெய்லின் ஸ்டிரைக் ரேட் 200 ஆக இருந்தது.

ஐபிஎல்லில் போன பார்ம்

ஐபிஎல்லில் போன பார்ம்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தனது வழக்கமான பார்மில் இல்லை கெய்ல். இதனால் அவரது ரசிகர்களும் பெரும் ஏமாற்றமடைந்திருந்தனர். அதேசமயம், இறுதிப் போட்டியில் அவர் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக புயலாக மாறி கிலி காட்டினார். இந்த நிலையில் தற்போது கரிபீயன் லீக் போட்டியில் அசத்தியுள்ளார்.

Story first published: Tuesday, July 5, 2016, 13:10 [IST]
Other articles published on Jul 5, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+