Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெகா டி20 ரெக்கார்டு படைத்த 46 வயது பவுலர்..மலிங்கா, புவனேஸ்வரின் சாதனையை சமன் செய்த இம்ரான் தாஹிர்

டிரினிடாட்: "வயது என்பது வெறும் எண்கள் தான்" என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில் லசித் மலிங்கா மற்றும் புவனேஸ்வர் குமாரின் சாதனைகளை சமன் செய்து இருக்கிறார் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் இம்ரான் தாஹிர்.

தனது 46-வது வயதிலும், இளம் வீரர்களுக்கு சவால் விடும் வகையில், கரீபியன் பிரீமியர் லீக் (CPL) 2025 தொடரில் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு வரும் இம்ரான் தாஹிர், ஆண்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தனது சுழற்பந்து வீச்சால் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

CPL Imran Tahir Equals Bhuvneshwar Kumar Lasith Malinga s T20 Record

இதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் புவனேஸ்வர் குமார் மற்றும் இலங்கையின் லசித் மலிங்கா ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார். சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கயானா அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.

ஷாய் ஹோப் (82), ஹெட்மயர் (65*) ஆகியோரின் அதிரடியால் மெகா ஸ்கோரை எட்டியது. இதையடுத்து, 212 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய ஆண்டிகுவா அணிக்கு, இம்ரான் தாஹிர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். தனது கட்டுப்பாடான மற்றும் தந்திரமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களைத் திணறடித்த அவர், 4 ஓவர்கள் வீசி, ஒரு மெய்டனுடன் வெறும் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதில் ஷகிப் அல் ஹசன், இமாத் வாசிம், ஷமார் ஸ்பிரிங்கர், உசாமா மிர் மற்றும் ஒபெட் மெக்காய் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும். இம்ரான் தாஹிரின் இந்த அசாத்திய பந்துவீச்சால், ஆண்டிகுவா அணி 15.2 ஓவர்களில் 128 ரன்களுக்குச் சுருண்டு, 83 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சாதனையை சமன் செய்த தாஹிர்

இந்த 5 விக்கெட் சாதனையின் மூலம், இம்ரான் தாஹிர் தனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் 5-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், புவனேஸ்வர் குமார், லசித் மலிங்கா, ஷஹீன் அப்ரிடி, மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோருடன் இணைந்து, டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கூட்டாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில், 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்காவின் டேவிட் வைஸ் முதலிடத்தில் உள்ளார்.

46 வயதிலும் ஒரு கேப்டனாக, ஒரு அணியை முன்னின்று வழிநடத்தி, இத்தகைய சாதனையை இம்ரான் தாஹிர் படைத்திருப்பது, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Story first published: Saturday, August 23, 2025, 13:08 [IST]
Other articles published on Aug 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+