Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

6வது உலகக்கோப்பை லோடிங்.. மொத்தமாக 8 ஆல் ரவுண்டர்கள்.. வேற லெவல் அணியை அறிவித்த ஆஸ்திரேலியா!

சிட்னி: உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேட்டிங் ஆல் ரவுண்டர்கள், 3 பவுலிங் ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐசிசி தொடர்கள் என்றாலே ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு புதிய தெம்பு வரும். சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஐசிசி தொடர்களை எப்படி வெல்ல வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணிக்கு நன்றாகவே தெரியும். 2 முறை உலகக்கோப்பையை வெல்வதற்கே பல அணிகள் திண்டாடிய நிலையில், 5 முறை ஐசிசி உலகக்கோப்பையை வென்று ஆஸ்திரேலியா சாதித்துள்ளது. தற்போது 6வது முறையாக உலகக்கோப்பையை வெல்வதற்கான வீரர்களை அறிவித்துள்ளது ஆஸ்திரேலியா நிர்வாகம்.

Cricket Australia announces 15 Member Squad for the ICC World Cup 2023

நட்சத்திர வீரர்களாக கம்மின்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் காயமடைந்த நிலையில், அனைவரும் உலகக்கோப்பைத் தொடருக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக மிட்செல் மார்ஷ், கேமரூன் க்ரீன் மற்றும் மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் பவுலிங் ஆல் ரவுண்டர்களாக பேட் கம்மின்ஸ் மற்றும் ஷேன் அப்பாட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2014ஆம் ஆண்டிலேயே ஆஸ்திரேலியா அணிக்கு அறிமுகமாகி இருந்தாலும், இதுவரை 11 முறை மட்டுமே ஷேன் அப்பாட் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களாக ஆஸ்டன் அகர் மற்றும் ஆடம் ஸாம்பா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் கிளென் மேக்ஸ்வெல்லும் சுழற்பந்துவீச்சு செய்வார். இதன் மூலம் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் வாய்ப்புகள் உள்ளது.

பின்னர் வழக்கம் போல் பேட்ஸ்மேன்களாக டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளராக ஹேசல்வுட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக 18 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலிய நிர்வாகம் அறிவித்தது. அதில் நேதன் எல்லீஸ், ஆரோன் ஹார்டி மற்றும் தன்வீர் சங்கா ஆகியோர் மட்டும் சேர்க்கப்படவில்லை.

உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவுக்கான எதிரான ஒருநாள் தொடர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. அதேபோல் 2 பயிற்சி போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியால் உலகக்கோப்பைத் தொடருக்கு சிறப்பாக தயாராக முடியும் என்று பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியுடன் ஒப்பிடும் போது அனுபவம் மற்றும் இளம் வீரர்களுடன் நல்ல கலவையாக அணி அமைந்துள்ளது.

Story first published: Wednesday, September 6, 2023, 9:59 [IST]
Other articles published on Sep 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+