Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சார்.. நீங்க இதுவரைக்கும் வைச்சு செஞ்சதே போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. ஆஸி. கிரிக்கெட்டில் அதிரடி

சிட்னி : கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை அதிகாரி கெவின் ராபர்ட் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Cricket Australia CEO Kevin Roberts resigns

கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தான் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகித்து வருகிறது.

பிசிசிஐக்கு அடுத்து அதிக வருமானம் ஈட்டும் கிரிக்கெட் அமைப்பு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தான்.

நிதிச் சிக்கல் எப்படி?

நிதிச் சிக்கல் எப்படி?

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாத நிலையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு நிதிச் சிக்கலில் உள்ளது. இது எப்படி சாத்தியம்? என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், அந்த நாட்டின் மாநில கிரிக்கெட் அமைப்புகள் குழப்பத்தில் உள்ளன.

முதலீடுகள்

முதலீடுகள்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா சில முதலீடுகளை செய்ததாகவும் அவற்றை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில் பணமாக மாற்ற முடியாத சிக்கல் இருப்பதாகவும் கூறப்பட்டது. நிதிச் சிக்கலால் ஊழியர்களை பணி நீக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது.

கோபம்

கோபம்

அந்த முடிவு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. மாநில கிரிக்கெட் அமைப்புகள் கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம் மீது கோபம் கொண்டது. இந்த நிலையில், அவர்களை சமாதானம் செய்ய வேண்டி கெவின் ராபர்ட் பணி நீக்கம் செய்யப்பட உள்ளார்.

பணி நீக்கம்

பணி நீக்கம்

ஏற்கனவே, ரக்பி ஆஸ்திரேலியா மற்றும் தேசிய ரக்பி லீக் அமைப்புகளின் தலைவர்கள் இதே போன்ற காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்து கெவின் ராபர்ட் நீக்கப்பட உள்ளார்.

முந்தைய தலைமை அதிகாரி

முந்தைய தலைமை அதிகாரி

கெவின் ராபர்ட் பதவியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. முன்னதாக 17 ஆண்டுகள் இதே பதவியில் இருந்து, பின் பந்து சேத விவகாரத்தால் பதவியை இழந்த ஜேம்ஸ் சதர்லேண்டுக்குப் பின் இவர் நியமிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 15, 2020, 20:41 [IST]
Other articles published on Jun 15, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+