இனிமே காயின் வேணாம்.. பேட்டை தூக்கி போட்டு டாஸ் போடுவோம்.. லந்து பண்ணும் ஆஸ்திரேலியா
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் இனி காயின் டாஸ் கிடையாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
காயினுக்கு பதில் பேட்டை தூக்கி போட்டு டாஸ் போலவே முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிலர் இதற்கு வரவேற்பு அளித்துள்ளனர். மற்ற நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இதை வேடிக்கையாகப் பார்க்கின்றனர்.

பிக் பாஷ் லீகில் புதிய நடைமுறை
எட்டாவது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது பிக் பாஷ் லீக். இந்தியாவில் ஐபிஎல் போல, ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் நடத்தப்படுகிறது. இந்த வருட பிக் பாஷ் லீக் வரும் டிசம்பர் 19 முதல் துவங்க உள்ளது. அதில் புதிய நடைமுறையாக பேட் ஃபிலிப் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது என்ன பேட் ஃபிலிப்?
காயினை தூக்கி போட்டு "ஹெட்ஸ், டெயில்ஸ்" கேட்பது வழக்கம். அதற்கு பதிலாக, ஆஸ்திரேலிய வீடுகளில், தெருக்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டை தூக்கிப் போட்டு டாஸ் போடுவார்கள். இங்கே "ஹெட்ஸ், டெயில்ஸ்"-க்கு பதிலாக, "ஹில்ஸ், பிளாட்ஸ்" பயன்படுத்தப்படும். அதாவது, பேட்டின் மேடான பகுதி ஹில்ஸ், சமமான பகுதி பிளாட்ஸ்.

ஏங்க இப்படி பண்றீங்க?
இதை சிலர் விமர்சித்து வரும் நிலையில், பிக் பாஷ் லீகின் தலைவர் கிம் மெக்கோனி, "சிலர் இதை விரும்பவில்லை. ஆனால், கடைசியாக எப்போது காயின் டாஸ் நிகழ்வை நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தீர்கள்? இப்போது குடும்பங்கள் மற்றும் குழந்தைகள் கூட இதை பார்க்கக் காத்திருப்பார்கள்" என கூறினார்.

பேட் ஃபிலிப் சரியா வருமா?
இந்த பேட் ஃபிலிப் மூலம் வரும் முடிவு, காயின் போலவே 50-50 சதவீதம் வாய்ப்பு சரி சமமாக இருக்கும் வகையில் இருக்குமாறு பேட்டை சரி சமமான எடையில் தயாரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர் பிக் பாஷ் லீக் தலைவர். எப்படியோ!! பிரச்சனை வராம பார்த்துக்குங்க..


Click it and Unblock the Notifications