Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெஸ்ட் மேட்சா.. இனி டே நைட் தான்.. இந்தியாவிடம் அடம்பிடிக்கும் ஆஸி.!

அடிலெய்டு : இனி வரும் காலங்களில் அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் எல்லாம் பகலிரவு ஆட்டமாக மாற்றலாம் என்று இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா யோசனை தெரிவித்துள்ளது.

அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய அதிகாரியான கெவின் ராபர்ட்ஸ் இந்த யோசனையை முன் வைத்துள்ளார். இந்த இரு அணிகளுக்கும் இடையேயான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களே மைதானத்தை ஆக்கிரமித்து இருந்ததால் இந்தயோசனையை அவர் பகிர்ந்துள்ளார்.

cricket Australia urges India to play Day-Night test matches

ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம், முன்னதாக பிங்க் நிற பந்தை டெஸ்ட் தொடர் முழுவதற்கும் பயன்படுத்தலாம் என்று முடிவு எடுத்திருந்தது. ஆனால் அதை ஏற்க மறுத்த இந்தியா, ஆஸி.யின் கோரிக்கையை முற்றிலுமாக புறந்தள்ளியது.

இந்த முடிவுக்கு ஆஸி. வர என்ன காரணம் என்பதற்கான கூடுதல் தகவல்களும் தற்போது வெளி வந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு நேரடெஸ்ட் போட்டியை காண வந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் முதல் 55 ஆயிரம் வரை.

ஆனால், தற்போது ஒட்டு மொத்தமாக எத்தனை பேர் இந்த ஆட்டத்தை காண வந்துள்ளனர் என்று கணக்கிட்ட போது, ஆஸி. நிர்வாகத்துக்கு லேசாக அதிர்ச்சி. தமது நாட்டின் தேசிய விளையாட்டை காண வந்திருந்தவர்கள் குறைவாக இருந்ததை கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர்.

கிரிக்கெட் விசிறிகளை படிப்படியாக இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்துள்ள ஆஸி. நிர்வாகத்தின் முடிவு தான் பகல் இரவு நேரடெஸ்ட் போட்டி. இது தொடர்பான தகவல்களை இந்திய அணி நிர்வாகத்திடம் விளக்கமாக எடுத்து கூறி... எப்படியாவது இனி பகல் இரவு டெஸ்ட் தான் என்பதில் உறுதியாக இருக்கிறது ஆஸ்திரேலியா.. பார்ப்போம்.... என்ன நடக்குகிறது என்று.

Story first published: Friday, December 7, 2018, 16:14 [IST]
Other articles published on Dec 7, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+