Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த வருஷம் கண்டிப்பா முடியாதுங்க... வேணும்னா அடுத்த வருஷம் நடத்திக்கறோம்

சிட்னி : இந்த ஆண்டு கொரோனா பாதிப்பில் சிக்கியதால் டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது இயலாது என்றும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் ஐசிசியின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் கமிட்டிக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்த தங்களுக்கு அனுமதி அளித்தால், அடுத்த ஆண்டு நடத்தவேண்டிய இந்தியாவிற்கு வரும் 2022ம் ஆண்டு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கலாம் என்றும் எட்டிங்க்ஸ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசி கூட்டத்தில் இன்று முடிவு

ஐசிசி கூட்டத்தில் இன்று முடிவு

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர் 18ம் தேதி துவங்கி நவம்பர் 15ம் தேதிவரை டி20 உலக கோப்பை தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா உள்ளிட்ட பாதிப்புகளால் தொடரை இந்த ஆண்டு நடத்த முடியாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தொடரை ஒத்திவைக்க ஐசிசி பிரதிநிதிகள் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட உள்ளது.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம்

இந்நிலையில், இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாது என்றும் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை நடத்தவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசியின் நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் கமிட்டிக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் இயர்ல் எட்டிங்ஸ் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடிதம்

கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடிதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் இஷான் மணி தலைவராக உள்ள இந்த கமிட்டியில் பிசிசிஐ உறுப்பினராக இல்லை. இந்நிலையில் இந்த கமிட்டிக்குதான் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைவர் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும், அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2022ல் இந்தியாவும் நடத்த ஐசிசி அனுமதி வழங்கலாம் என்று அவர் தனது கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஒரு ஆண்டுகால அவகாசம்

மேலும் ஒரு ஆண்டுகால அவகாசம்

இதன்மூலம் கொரோனா பாதிப்பை சரிபடுத்திக்கொள்ள இந்தியாவிற்கு மேலும் ஒரு ஆண்டுகால அவகாசம் கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களின்மூலம் இந்தியா அதிக வருமானம் ஈட்டுவதாகவும், ஆஸ்திரேலியா நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில், அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவிற்கு விட்டு கொடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, May 28, 2020, 15:35 [IST]
Other articles published on May 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+