Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4 ஆண்டுகள் ஆகியும் மீண்டும் அதே நிலையா? உலக கோப்பை வேறு வருது.. கிரிக்கெட் விமர்சகர் நாணி கேள்வி?

சென்னை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இன்னும் 71 நாட்கள் தான் உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியில் இன்னும் சில தீர்க்கப்படாத பிரச்சனை இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர் நானி கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியில் வெஸ்ட் இண்டீஸ் ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தான் விளையாட இருக்கிறது.

Cricket commentator Nanee raises serious question about team india

இந்த தொடர்களில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும். ஆனால் இந்திய அணியில் பல பிரச்சனைகள் இன்னும் தீராமல் இருக்கிறது. இந்த நிலை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வர்ணனையாளர் நானி 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு முன் என்ன பிரச்சனை என்ன குழப்பம் இந்திய அணியில் இருந்ததோ அது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் தற்போது நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அணியில் பேட்டிங் நடு வரிசையில் நம்பர் 4 மற்றும் 5, 6 வது ஆகிய இடங்களுக்கு இன்னும் நாம் வீரர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறோம் என்றும் நாணி சூட்டி காட்டியுள்ளார். இந்திய அணியில் தற்போது கில் ரோஹித் கோலி ஆகிய மூன்று வீரர்களின் இடம்தான் தற்போது தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ள நானி ரிசப் பண்ட் தற்போது கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை.

கே.எல் ராகுலும்,ஸ்ரேயாஸ் ஐயரும் இன்னும் காயம் காரணமாக கிரிக்கெட் தொடர்களில் விளையாடவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணி 4 மற்றும் 5 மற்றும் 6வது இடங்களுக்கு பேக்அப் பிளானை இந்திய அணி யோசிக்க வேண்டும் என்றும் நாணி கூறியுள்ளார். இஷான் கிஷனை தொடக்க வீரராக களம் இறக்கி விட்டு சஞ்சு சாம்சனை தற்போது மூன்றாவது வீரராகவும் சூரியகுமார் யாதவை பேட்டிங் வரிசையில் மாற்றிக் கொண்டே இருப்பது 2019 ஆம் ஆண்டு என்ன நடைபெற்றதோ அதையே தான் ஞாபகப்படுத்துவதாக நாணி கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு உலககோப்பை க்கு முன்பு விஜய் சங்கர்,தினேஷ் கார்த்திக், ராயுடு, ரிஷப் பண்ட், கே எல் ராகுல் ஆகியோரை வைத்து இந்திய அணியில் மியூசிக்கல் சேர் நடத்தப்பட்டதாக விமர்சித்துள்ள நாணி தற்போது உலகக்கோப்பை தொடர்கான நேரம் நெருங்கி வருவதாகவும் எச்சரிக்கை கொடுத்துள்ளார். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் நாணி கூறியுள்ளார்.

Story first published: Saturday, July 29, 2023, 23:21 [IST]
Other articles published on Jul 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+