Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரவி சாஸ்திரியை கேட்கறீங்களே கோலி… இது நியாயமா? டுவிட்டரில் வெளுக்கும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்

Recommended Video

India Coach | அவரையே பயிற்சியாளராக போடுங்க..! ரவி சாஸ்திரிக்கு கோலி ஆதரவு- வீடியோ

மும்பை: ரவிசாஸ்திரி தான் பயிற்சியாளராக மீண்டும் வர வேண்டும் என்பது எனது விருப்பம் என்று கேப்டன் கோலி கூறியிருப்பது பலத்த விமர்சனங்களை எழுப்பி இருக்கிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் தேர்வு செய்ய விண்ணப்பிக்க வேண்டிய இறுதி நாள் செவ்வாய்கிழமையுடன் முடிகிறது. இந் நிலையில், வெஸ்ட் இண்டீசுக்கு புறப்படும் முன் செய்தியாளர்களுக்கு கேப்டன் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பேட்டியளித்தனர்.

அப்போது, ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பது பற்றி தன்னிடம் இன்னும் எந்த கருத்தும் கேட்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: ரவி சாஸ்திரியுடன் எங்கள் அனைவருக்கும் நல்ல இணக்கமான நட்புறவு உள்ளது.

கோலியின் மகிழ்ச்சி

கோலியின் மகிழ்ச்சி

ஒரு குழுவாக தான் செயல்பட்டு திறமையை வெளிப்படுத்தி வருகிறோம். ஆகவே அவரே தொடர்ந்து தலைமை பயிற்சியாளராக நீடித்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. ஆனால் இதனை கிரிக்கெட் ஆலோசனை குழுதான் முடிவு செய்ய வேண்டும். கிரிக்கெட் ஆலோசனைக் குழு என்னை தொடர்பு கொள்ளவில்லை என்றார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

கோலியின் இந்த கருத்து அல்லது விருப்பம் ஆகியவற்றுக்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. முன்னாள் கிரிக்கெட் ஜாம்ப வான்கள், வர்ணனையாளர்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி இருக்கின்றனர்.

அனைவருக்கும் வாழ்த்துகள்

பிரபல வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியிருப்பதாவது: கேப்டன் தமது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். கிரிக்கெட் ஆலோசனைக்குழுவில் இருக்கும் ஒருவரும் இதையே தான் கூறி இருக்கிறார். இன்னும் விண்ணப்பித்து கொண்டிருக்கிற, விண்ணப்பிக்க போகிற அனைவருக்கும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

தொடரும் எதிர்ப்பு

தொடரும் எதிர்ப்பு

மற்றொரு வர்ணனையாளர் ஹர்ஷா போக்லேயும் கோலியின் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஆகாஷ் சோப்ராவின் டுவிட்டரை ஆமோதித்து இருக்கிறார்.

பொருத்தமானதல்ல

அவர் கூறியிருப்பதாவது: விண்ணப்பங்கள் பெற்றுக் கொண்டு இருக்கும் போது இது போன்று அவர் கூறியிருப்பது பொருத்தமானது அல்ல. விராட் கோலி பற்றி நேரிடையாக குற்றம் சொல்ல வில்லை.

பரிசீலனையில் உள்ளது

இதுபோன்ற கேள்விகளை எதிர் கொள்ளும் போது அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன என்று கூறி இருக்க வேண்டும்.கோலி கூற வில்லை. யாராவது இவ்வாறு பேச வேண்டும் என்று எடுத்துச் சொல்லி இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Tuesday, July 30, 2019, 17:53 [IST]
Other articles published on Jul 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+