Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த அவமானம் தேவையா?.. இந்திய அணியை வம்பிழுத்து பார்த்த மைக்கேல் வாகன்.. ரசிகர் கொடுத்த தரமான பதிலடி

மும்பை: இந்திய அணி குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் கடுமையாக விமர்சித்திருந்த சூழலில் இந்திய ரசிகர் ஒருவர் தரமான பதிலடியை கொடுத்துள்ளார். அதுவும், அவரின் பாணியிலேயே மடக்கியுள்ளார்.

இந்திய அணி குறித்து மைக்கேல் வாகன் விமர்சிப்பதும், அதற்கு முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் பதிலடி கொடுப்பதும் வழக்கமாக நடந்து வரும் சண்டை தான். ஆனால் இந்த முறை பிரச்சினையை வசீம் ஜாஃபரே தொடங்கியுள்ளார்.

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோசமாக தோல்வியடைந்தது. ஒரு வெற்றியை கூட பெறாமல் முற்றிலும் ஒயிட் வாஷானது.

வசீம் ஜாஃபர் விமர்சனம்

வசீம் ஜாஃபர் விமர்சனம்

இதனையடுத்து இங்கிலாந்து குறித்து வசீம் ஜாஃபர் ட்வீட் செய்திருந்தார். அதில், ஒரு உலகக்கோப்பை சாம்பியன் அணி 3 - 0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் தோற்றிருக்கிறதே.. இதுகுறித்து ஏதாவது ட்வீட் செய்யலாமே வாகன் என கிண்டலடித்திருந்தார். எதிர்பார்த்ததை போலவே வாகனும் பதிலடி தர தவறவில்லை. அதில், ஆமாம் இங்கிலாந்து தோற்றுவிட்டது தான், ஆனால் அவர்கள் இன்னமும் உலக சாம்பியன்ஸ் தான் என கூறினார்.

வம்பிழுத்த வாகன்

வம்பிழுத்த வாகன்

தொடர்ந்து பேசிய அவர், என்னதான் இருதரப்பு தொடர்களில் தோற்றாலும், இங்கிலாந்து உலகக்கோப்பையை மனதில் வைத்து சரியாக முன்னேறி செல்கிறது. அதனை மனதில் வைத்ததுமே நல்லது. இந்தியாவும் இங்கிலாந்தை பின் பற்றினால் நல்லது அமையலாம் என மோசமாக விமர்சித்திருந்தார். இதனால் பல ரசிகர்களும் கோபமடைந்துள்ள சூழலில் ஒரே ஒருவர் மட்டும் வித்தியாசமான பதிலை கொடுத்துள்ளார்.

ரசிகர் தந்த பதிலடி

ரசிகர் தந்த பதிலடி

வாகனுக்கு ரிப்ளை செய்துள்ள அவர், இங்கிலாந்து அணி தான் இந்தியாவை பின் தொடர்கிறது என நினைக்கிறேன். ஏனென்றால் இந்தியா ஏற்கனவே இரண்டு 50 ஓவர் உலகக்கோப்பைகள் மற்றும் ஒரு டி20 உலகக்கோப்பையை வைத்துள்ளது.கிரிக்கெட்டை கண்டுபிடித்தவர்கள் எனக்கூறப்படும் இங்கிலாந்து அணியோ, முதல் கோப்பையையே 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் வென்றார்கள் என விமர்சித்தார்.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி, அடுத்ததாக 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்திய மண்ணில் தான் நடக்கிறது. எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Wednesday, March 15, 2023, 18:36 [IST]
Other articles published on Mar 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+