“காசுக்காக இப்படியா செய்வீங்க” காயம் எனக்கூறிவிட்டு ஜடேஜா செய்த காரியம்.. ரசிகர்களே கொந்தளிப்பு!

குஜராத்: உடல்நலம் சரியில்லை எனக்கூறிவிட்டு ரவீந்திர ஜடேஜா செய்த ஒரு விஷயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து மோசமான தோல்வியுடன் வெளியேறிய இந்திய அணி தற்போது நியூசிலாந்துடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விளையாடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. குறிப்பாக அரையிறுதியில் இங்கிலாந்து அணியில் ஒரு விக்கெட்டை கூட எடுக்காத போது அனைவரும் ஜடேஜாவை மிஸ் செய்தனர்.

கெளம்புங்க ஜடேஜா..! பிசிசிஐயை அன்னாந்து பார்க்க வைத்த வாசிங்டன் சுந்தர்.. அப்படி என்ன செய்தார்?கெளம்புங்க ஜடேஜா..! பிசிசிஐயை அன்னாந்து பார்க்க வைத்த வாசிங்டன் சுந்தர்.. அப்படி என்ன செய்தார்?

ஜடேஜாவின் காயம்

ஜடேஜாவின் காயம்

ரவீந்திர ஜடேஜா, தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக தகவல் வெளியானது. வங்கதேச தொடரில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்த்திருந்த சூழலில் திடீரென உடல்நலம் இன்னும் சரியாகவில்லை எனக்கூறி வெளியேறினார். அவரின் காயம் சரியாகி அணிக்கு திரும்ப 2023ம் ஆண்டு ஆகிவிடும் எனக்கூறப்பட்டு வருகிறது.

 தேர்தலில் பிரச்சாரம்

தேர்தலில் பிரச்சாரம்

இந்நிலையில் அவர் செய்துள்ள ஒரு விஷயம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் பாஜக கட்சிக்காக ஜடேஜா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 3 நாட்களுக்கும் மேலாக அவர் ஒவ்வொரு இடமாக சென்று ஓய்வின்றி மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

உடல்நிலை சரியில்லை எனக்கூறிவிட்டு தேசத்திற்காக ஆடும் போட்டியில் இருந்து விலகினீர்களே, தற்போது பாஜக கட்சிக்காக மட்டும் ஓய்வின்றி எப்படி உங்களால் பிரச்சாரம் செய்ய முடிகிறது. அதுவும் காலில் காயம் எனக்கூறிவிட்டு, நின்றபடியே வாக்கு சேகரிக்கிறார். இந்த நேரத்தை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தால் கூட வெகு சீக்கிரமாக உடற்தகுதி பெறலாம் அல்லவா? எனக்கூறி கோபத்தை காட்டி வருகின்றனர்.

தேர்தலில் போட்டி

தேர்தலில் போட்டி

இந்த தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் ஜாம்நகர் தொகுதியில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து மறுமுனையில் காங்கிரஸ் கட்சிக்காக ஜடேஜாவின் சகோதரி நய்னபா போட்டியிடுகிறார். எனவே மனைவிக்காக அவர் பாஜகவை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Indian Cricket Fans are furious at All Rounder Ravindra jadeja after his interest in politics
Story first published: Saturday, November 26, 2022, 14:10 [IST]
Other articles published on Nov 26, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X