
டிக்கெட் விற்பனை
2வது டெஸ்ட் போட்டியில் 15,000 ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் மைதானத்தின் அனைத்து காலரிகளிலும் ரசிகரகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்லைனில் மட்டுமே நடைபெற்ற டிக்கெட் விற்பனையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.

கெத்து காட்டும் ரசிகர்கள்
டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் மைதானத்திற்கு வெளியேவும் குவிந்து வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆரவாரத்துடன் 2வது டெஸ்ட் போட்டி கலைகட்டியுள்ளது. அவர்களை கட்டுப்படுத்த 400க்கும் மேற்பட்ட போலீசார் மைதானத்தின் உள்ளும், வெளியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

விறுவிறுப்பு
2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆட்டத்தின் முதல் பந்து முதலே பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நம்பிக்கை
முன்னதாக 2வது டெஸ்ட் குறித்து ட்வீட் செய்திருந்த பிசிசிஐ, இந்திய ரசிகர்களே உங்களை நாங்கள் மிஸ் செய்தோம், மீண்டும் உங்கள் கர்ஜனையை மைதானத்தில் கேட்க காத்திருக்கிறோம். " என பதிவிட்டிருந்தது.


Click it and Unblock the Notifications