இப்போ தெரியுதா சஞ்சு சாம்சன் அருமை.. ஒரே ஒரு வீரரால் தரைமட்டமான இந்திய அணி.. கொந்தளிக்கும் ரசிகர்கள்
க்ரைஸ் சர்ச்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி எடுத்த தவறான முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது என ரசிகர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று க்ரைஸ்ட் சர்ச் நகரத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளது.

3வது போட்டி
இந்திய அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் 28 ரன்களுக்கும், சுப்மன் கில் 13 ரன்களுக்கும் அடுத்தடுத்து வெளியேறினர். இதன்பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சீரான வேகத்தில் ரன் உயர்த்தினார். ஆனால் நீண்ட நேரம் நீடிக்க முடியாமல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் வெறும் 6 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

தடுமாறும் இந்திய அணி
இதனால் இந்திய அணி 121 ரன்களுக்கெல்லாம் 5 விக்கெட்களை இழந்து திணறியது. தொடர்ச்சியாக சொதப்பினாலும், இடதுகை பேட்ஸ்மேன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக வாய்ப்பு பெற்ற ரிஷப் பண்ட் இந்த முறையும் வழக்கம் போல சொதப்பினார். 16 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 10 ரன்களை மட்டும் எடுத்து நடையை கட்டினார்.

முதல் போட்டிக்கான சம்பவம்
இதே போன்ற நிலைமை தான் முதல் ஒருநாள் போட்டியிலும் நடந்தது. 160 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்கள் சென்ற போது, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஒருபுறம் ஸ்ரேயாஸை அதிரடி காட்டக்கூறிய சஞ்சு சாம்சன், தானும் சீரான வேகத்தில் 37 ரன்களை அடித்தார். அவரின் பொறுப்புமிக்க ஆட்டம் தான் இந்தியாவின் ஸ்கோரை 306 ரன்கள் வரை கொண்டு சென்றது.

கொந்தளிக்கும் ரசிகர்கள்
எனவே அணியில் சஞ்சு சாம்சன் இல்லாமல் போனால் என்ன ஆபத்து நடக்கும் என இப்போது புரிந்ததா?, இனிமேலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பை கொடுங்கள் என ட்விட்டரில் ரசிகர்கள் கடும் கோபத்துடன் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதற்கு வல்லுநர்கள் பலரும் ஆதரவுக் கொடுத்து வருவதால், அதிரடி மாற்றங்கள் இனி இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications