Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிசிசிஐ-க்கு எதிராக திடீர் போர்க்கொடி.. தென்னாப்பிரிக்க தொடரில் கொந்தளித்த ரசிகர்கள்.. காரணம் என்ன?

பெங்களூரு: பிசிசிஐ-க்கு எதிராகவும், அதன் நிர்வாகத்தை கண்டித்தும் திடீரென ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்ற சூழலில் 5வது டி20 போட்டி ரத்து செய்யப்பட்டது.

ரத்தான ஆட்டம்

ரத்தான ஆட்டம்

போட்டி நடைபெற்ற பெங்களூருவில் நீண்ட நேரமாக மழை பெய்து வந்ததால், ஆட்டம் கைவிடப்பட்டது. தொடரும் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து அனைத்து வீரர்களும் அடுத்த தொடருக்கு தயாராக சென்றுவிட்ட நிலையில், தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட முக்கிய பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரச்சினை என்ன

பிரச்சினை என்ன

நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழைப்பெய்த போது, மைதானத்திற்கு உள்ளேயும் மழை நீர் ஊற்றியுள்ளது. மேற்கூரைகள் தரமின்றி இருந்ததால், ரசிகர்கள் அனைவரும் சிரமத்திற்கு ஆளாகினர். அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கி வரும் ரசிகர்கள், மழைக்கு ஒதுங்க கூட இடமில்லை என ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

பணக்கார கிரிக்கெட் வாரியம்

பணக்கார கிரிக்கெட் வாரியம்

தற்போது உலகின் மிகவும் செல்வம் மிகுந்த கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ தான் உருவெடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமை மட்டும் ரூ. 48,000 கோடிக்கு சென்றுள்ளது. இவ்வளவு செல்வம் உள்ள போதும், மைதானத்தின் வசதிகள் மற்றும் தரம் இவ்வளவு மோசமாகவா இருப்பது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Recommended Video

T20 Worldcup-க்கு Deadline விதித்த ICC | Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil
கங்குலியின் விளக்கம்

கங்குலியின் விளக்கம்

இதுகுறித்து ஏற்கனவே பேசியிருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் வருமானத்தை வைத்து, இந்தியாவில் உள்ள மைதானங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவுள்ளோம், புதிய மைதானங்களை கட்டவுள்ளோம் என உறுதியளித்திருந்தார்.

Story first published: Monday, June 20, 2022, 20:31 [IST]
Other articles published on Jun 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+