Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே நாளில் 3 போட்டிகள் ரத்து.. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட புது பிரச்சினை.. டி20 உலகக்கோப்பைக்கு சிக்கல்

பிரிஸ்பேன்: டி20 உலகக்கோப்பை தொடரில் வானிலை தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகளும், பயிற்சி போட்டிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பயிற்சி போட்டி

பயிற்சி போட்டி

அதிவேகமான களம், அதிரடி பேட்டிங், அட்டகாசமான பவுன்சர்கள் என ஆஸ்திரேலியாவின் களங்கள் சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு வானிலை ஆப்பு வைத்துள்ளது. அதாவது ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதால் கவலை ஏற்பட்டுள்ளது. அதுவும் இன்றைய தினமே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

மழை பாதிப்பு

மழை பாதிப்பு

பிரிஸ்பேனில் உள்ள புகழ்பெற்ற காப்பா மைதானத்தில் இன்று காலை ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின. சாஹீனின் யார்க்கர், ஆஃப்கானின் போராட்டம் என சுவாரஸ்யமாக சென்ற இந்த போட்டி திடீரென மழையால் பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் மழை நிற்காததால் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.

அடுத்த 2 ஆட்டம்

அடுத்த 2 ஆட்டம்

இதே மைதானத்தில் இன்று மதியம் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பயிற்சி போட்டியில் மோதவிருந்தது. மழையின் தாக்கம் சற்றும் குறையாததால் டாஸ் கூட போடப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நடைபெறவிருந்த வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளின் பயிற்சிப் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இந்திய போட்டி

இந்திய போட்டி

ஒரே நாளில் மூன்று போட்டிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்களுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் அக்டோபர் 23ம் தேதியன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியின் போது வானிலை சொதப்பிவிடக்கூடாது என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

Story first published: Wednesday, October 19, 2022, 22:34 [IST]
Other articles published on Oct 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+