Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் ஒரு அவுட்டா??.. அம்பயர்களின் மிக மோசமான முடிவு.. டி20 உலகக்கோப்பையில் புதிய சர்ச்சை!

அடிலெய்ட்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச வீரர் சகிப் அல் ஹசனுக்கு அம்பயர்கள் வழங்கிய மோசமான முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லீக் சுற்றின் கடைசி நாளான இன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் மோதிய இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டி நடைபெற்றது. அதன்படி டாஸ் வென்ற வங்கதேச அணி அட்டகாசமான ஓப்பனிங்கை பெற்றது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

தொடக்க வீரர் ஹுசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 54 ரன்களை குவித்திருந்தார். இவருக்கு துணையாக ஆடிய சௌம்யா சர்கார் 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் வங்கதேச அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.

 மீண்டும் அம்பயரின் சர்ச்சை

மீண்டும் அம்பயரின் சர்ச்சை

இந்த சூழலில் களத்திற்கு வந்த கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி இருந்தது. ஆட்டத்தின் 11வது ஓவரில் சதாப் கான் வீசிய டாஸ் பந்தை சகிப் தவறவிட்டதால் பேட்டில் பட்டது. அப்போது களநடுவர் உடனடியாக அவுட் கொடுத்தார். ஆனால் பேட்டில் எட்ஜானது என உறுதியாக இருந்த சகிப் அல் ஹசன் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார்.

உண்மை என்ன

உண்மை என்ன

ரிவ்யூ செய்து பார்த்த போது, பந்து நேராக பேட்டில் உரசிச்சென்றது தெரியவந்தது. மேலும் அல்ட்ரா எட்ஜிலும் பேட்டில் எட்ஜானது தெளிவாக தெரிந்தது. ஆனால் அப்போதும் அது அவுட்தான் என 3வது நடுவர் அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தெளிவாக உண்மை தெரிந்தபோதும் எதற்காக அவுட் கொடுத்தார்கள் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

அம்பயர்கள் விளக்கம்

அம்பயர்கள் விளக்கம்

இதற்கு அம்பயர்கள் விளக்கமும் கொடுத்தனர். அதாவது பந்தானது பேட்டில் படவில்லை எனவும், அது பிட்ச்-ல் பட்டதால் அல்ட்ரா எட்ஜில் காட்டுகிறது என கூறினர். உண்மையில் பந்துக்கும், பிட்ச்-க்கும் பெரிய இடைவெளி இருந்தது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை டி20 உலகக்கோப்பையில் மோசமான அம்பயரிங் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த ஸ்கோர்

குறைந்த ஸ்கோர்

அந்த ஒரு விக்கெட்டின் தாக்கத்தால் வங்கதேச அணியின் மொத்த நம்பிக்கையும் குறைந்தது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. 13 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் இருந்த வங்கதேச அணி 150+ அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Story first published: Sunday, November 6, 2022, 11:35 [IST]
Other articles published on Nov 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+