இது நமக்கு தேவையா? தோனி, சச்சினை கெட்ட வார்த்தையில் திட்டிய பிரதீப் ரங்கநாதன்..கொந்தளித்த ரசிகர்கள்
சென்னை: இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை திடீரென கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பெரும் ஏமாற்றத்தை சந்தித்த ரசிகர்கள், ஐபிஎல் அணிகளின் தக்கவைப்பு பட்டியல் குறித்து கடந்த 2 நாட்களாக பேசி வந்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஒட்டுமொத்த கவனமும் திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் மீது திரும்பியுள்ளது. இதற்கு காரணம் பிரதீப் போட்டுக்கொடுத்த திட்டம் தான்.

ரசிகர்கள் கோபம்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீத்தில் 'லவ் டுடே' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஒரு காதல் ஜோடி செல்ஃபோனை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டால் எப்படி பிரச்சினை ஏற்படும் எனக் கூறியிருந்தார். ஆனால் அவரின் இந்த கதை, அவருக்கே ஆபத்தாக வந்து முடிந்துள்ளது.

என்ன ஆனது
பிரதீப் ரங்கநாதன் கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் போட்ட ஃபேஸ் புக் பதிவுகளை ரசிகர்கள் தேடி எடுத்துள்ளனர். அதில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், தோனி, நெஹ்ரா உள்ளிட்டோரை கெட்ட வார்த்தைகளில் மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

என்ன சொன்னார்
குறிப்பாக சச்சின் மாதிரி ஒரு சுயநலவாதி **** இல்லை என கூறியிருந்தார். தோனி எந்த பந்தையும் அடிக்காமல், விளையாடவே தெரியாது என்பது போல மோசமாக விமர்சித்துள்ளார். இதனை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் பிரதீப் ரங்கநாதனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஓடிய பிரதீப்
இது ஒருபுறம் இருக்க, விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத பிரதீப் ரங்கநாதன், தனது ஃபேஸ்புக் ஐடியை டீஆக்டிவேட் செய்துவிட்டார். 18 வயதில் அவர் செய்த தவறு இன்று அவர் கொடுத்த ஐடியாவாலேயே பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர்களையும் அவர் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications