Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது மாறவே மாறாதா??.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. ஐசிசி மீது கோபத்தை கொட்டும் ரசிகர்கள்!!!

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் ஐசிசி பெரிய தவறை செய்து வருவதாக ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 4 அணிகள் வெளியேற, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

இரு அணிகளும் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியுடன் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, இந்த முறை பதிலடி கொடுப்பதற்காக முனைப்புடன் உள்ளது. மறுபுறம் இலங்கை அணி நல்ல ஃபார்மில் இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திடீர் குற்றச்சாட்டு

திடீர் குற்றச்சாட்டு

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடர் சரியாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் டாஸ் வெல்லும் அணி தான் வெற்றிகளை பெற்றுள்ளன. இது தொடர்கதையாக இருந்து வருகிறது. டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தான் தேர்வு செய்கின்றன. 2வது பந்துவீசும் அணிக்கு சற்று கடினமானதாக உள்ளது.

மோசமான ரெக்கார்ட்

மோசமான ரெக்கார்ட்

துபாய் மைதானத்தில் நடைபெற்ற கடைசி 30 சர்வதேச டி20 போட்டிகளில் 26 போட்டிகளில் 2வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து ஐபிஎல் தொடர் வரை இங்கு நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளில் டாஸிலேயே வெற்றியாளரை தீர்மானிக்கும் நிலை தான் உள்ளது. அந்தவகையில் இன்றும் அதே கணிப்பு தான் உள்ளது.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

டாஸில் ஒரு போட்டியின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவது ஏற்புடையது அல்ல, ஐசிசி எப்படி இதுபோன்ற ஒரு களங்களுக்கு அனுமதி தருகிறது என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியுடனான போட்டிகளில் இந்தியா டாஸை தோற்றது. எதிர்பார்த்ததை போன்றே தோல்வியும் அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 11, 2022, 18:37 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+