Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்க வந்தவர்களை விரட்டியடித்தது போலீஸ்

Nagpur Cricket Stadium
நாக்பூர்: நாக்பூரில், உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் முண்டியடித்ததால், கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர்.

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் பெரும் குளறுபடிகள் காணப்படுகின்றன. மிகக்குறைந்த அளவிலான டிக்கெட்களையே ரசிகர்களுக்கு விற்று வருகிறார்கள். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக டிக்கெட் விற்பனையின்போது முந்திக் கொண்டு டிக்கெட் வாங்க முயற்சிப்பதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில் தடியடியும் நடத்தப்படுவதால் ரசிகர்கள் டிக்கெட் வாங்கப் போய் தடியடியை சுமக்க நேரிடும் அவலம் காணப்படுகிறது.

சமீபத்தில் பெங்களூரில் ஏதோ தீவிரவாதிகளைப் பிடிப்பது போல விரட்டி விரட்டி ரசிகர்களைப் பிடித்து போலீஸார் அடித்த செயல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று நாக்பூரில் டிக்கெட் வாங்க வந்த ரசிகர்களை போலீஸார் தடியடி நடத்தி விரட்டியுள்ளனர்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதையடுத்து விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்திற்கு வெளியே ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட்களை வாங்க முயன்றனர்.

இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி ரசிகர்களைக் கலைத்து விரட்டினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. பலர் கை, கால்களில் அடிபட்டு ஓடியது பார்க்கவே படு பரிதாபமாக இருந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+