“அன்று தோனி.. இன்று ஹர்மன்ப்ரீத்”.. நம்.7 ஜெர்சிக்கு நடக்கும் கொடுமை.. கிரிக்கெட் ரசிகர்கள் கவலை!
மும்பை: இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனிக்கு நடந்த அதே கொடுமை ஹர்மன்ப்ரீத் கவுருக்கும் நடந்ததால் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
மகளிருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப்போட்டி நேற்று கேப்டவுனில் நடைபெற்றது. இதில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு பேட்டிங்கும் சிறப்பாக இருந்ததால் 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்களை குவித்தது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்
சிறப்பாக விளையாடிய தொடக்க பேட்டர் மூனி 37 பந்துகளில் 54 ரன்களை குவித்தார்.
மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் லான்னிங் மற்றும் கார்ட்னர் ஆகியோர் இந்தியாவின் பவுலிங்கை அடித்து நொறுக்கினர். அதிரடியாக ஆடிய லன்னிங் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 49 ரன்களை விளாசினார். இதனால் 173 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

இந்திய அணி இன்னிங்ஸ்
இதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங் மோசமாக சொதப்பியது. ஓப்பனிங் பேட்டர்கள் சஃபாலி வெர்மா 9 ரன்களுக்கும், ஸ்மிருதி மந்தனா 2 ரன்களுக்கும் விக்கெட்டை பறிகொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய யாஷ்டிகா பாட்டியா வெறும் 4 ரன்களை மட்டுமே எடுத்தார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவூர் 52 ரன்களும், ஜெமிமா 42 ரன்களும் மட்டுமே அடிக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது.

ரன் அவுட்
இந்நிலையில் இந்த விஷயத்தில் திடீரென தோல்வியை நினைவுக்கூர்ந்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்தியா நிறைய விக்கெட்களை இழந்து தடுமாறிய போது தோனி தான் நம்பிக்கை தந்தார். எனினும் அவர் நூலிழையில் ரன் அவுட்டாகி உலகக்கோப்பை கனவு தகர்ந்தது. அதே சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது.

நம்.7 ஜெர்சி
தோனியை போலவே நம்பர் 7 ஜெர்சி அணியும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 52 ரன்கள் அடித்து சிறப்பாக ஆடி வந்தார். 14.4வது ஓவரில் மிட் விக்கெட்டில் ஸ்வீப் ஷாட் சிங்கிள் ஆட முயன்றார். அப்போது அதனை டைவ் அடித்து பிடித்த கார்ட்னர் அதிவேகமாக ஸ்டம்பிற்கு அனுப்பிவிட்டார். இதனால் கிட்டத்தட்ட கிறீஸை நெருங்கிவிட்ட ஹர்மன்ப்ரீத் கவுர் துரதிஷ்டவசமாக தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இத்துடன் இந்தியாவின் டி20 உலகக்கோப்பை கனவும் தகர்ந்தது. இதனை நினைவுக்கூர்ந்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications