“வீடியோவ டெலிட் பண்ணுங்க அண்ணா”.. அஸ்வின் தந்த ஐடியாவால் தப்பித்ததா ஆஸி, அணி.. ரசிகர்கள் அதிருப்தி!
இந்தூர்: இந்தியாவில் உள்ள களங்களில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்ட உடனேயே ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி வருவதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பியது.
முதலில் பேட்டிங் செய்தால் சாதகமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 109 ரன்களுக்கெல்லாம் ஆல் அவுட்டானது.

ஆஸ்திரேலிய இன்னிங்ஸ்
இந்தூர் களத்தில் இந்திய அணியே இப்படி சொதப்புகிறது என்றால் ஆஸ்திரேலியாவின் நிலைமை பரிதாபம் தான் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் அங்கு தான் பெரும் ட்விஸ்ட். ஒவ்வொரு பந்தையும் சரியாக கணித்து ஆடிய ஆஸ்திரேலிய வீரர்கள் 186 ரன்களுக்கு 4 விக்கெட்கள் என மிகவும் வலுவான நிலைக்கு சென்றனர். எனினும் லோயர் ஆர்டர் சொதப்பியதால் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 88 ரன்கள் முன்னிலை பெற்றனர்.

அஸ்வின் வீடியோ
இந்நிலையில் இதற்கெல்லாம் காரணம் அஸ்வின் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அஸ்வின் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய களத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை விளக்கியிருந்தார். அதன்படி இந்தியாவில் உள்ள களங்களில் காலை முதல் செஷனின் போது எப்போதுமே கூடுதல் வேகம் இருக்கும் எனக்கூறினார்.

என்ன செய்யலாம்?
அதிக வேகம் கொண்ட முதல் செஷனில் அதிவேகமாக பந்து டேர்னாகி உள்ளே வரும். இதனால் விக்கெட்கள் விழலாம். அந்த நேரத்தில் ரன் அடிக்க நினைத்தால் சரியாக இருக்காது. எனவே
நேரம் போக போக பிட்ச் ஸ்லோவாகிவிடும். அதன்பிறகு கவனித்து விளையாடினால் சீரான வேகத்தில் ரன் குவிக்கலாம் என்பது போல கூறியிருந்தார்.

பயன்படுத்திய ஆஸி,
அஸ்வின் வீடியோ வெளியிட்ட பிறகு ஆஸ்திரேலியா நன்கு பேட்டிங் செய்தது. முதல் நாளின் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவால் ரன் அடிக்க முடியவில்லை. ஆனால் மதியத்திற்கு பிறகு பிட்ச்- ஸ்லோவானதால் ஆஸ்திரேலியா முதல் நாளின் முடிவின் போதே 4 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்களை குவித்துவிட்டது. இதனால் " அண்ணா அந்த வீடியோவை நீக்கிவிடுங்கள்" என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications