Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குறுக்கே வந்த கவுசிக்.. ஹாட் ஸ்டாரை வச்சு செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்.. உதவ ஓடி வந்த ஜியோ.. பாவம்!

டெல்லி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட்டின் போது ஹாட் ஸ்டார் நிறுவனம் பெரும் அதிர்ச்சியை கொடுத்ததால் ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

இரு அணிகளுக்கும் மோதும் இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிட்ச் சற்று பேட்டிங்கிற்கு உதவும் வகையில் இருந்ததால் பேட்டிங் எடுத்தனர்.

அதற்கேற்றார் போலவே ஓரளவிற்கு சிறப்பான பேட்டிங் இந்த முறை அமைந்தது. உஸ்மான் கவாஜா 81 ரன்கள் மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடிக்க அந்த அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். வீரர்களுக்குள் அடிக்கடி சண்டைகள், சவால்கள் இருக்கும் என்பதால் சுவாரஸ்யமாக பார்த்து வருவார்கள். அந்தவகையில் இன்று பார்த்துக்கொண்டிருந்த போது ரசிகர்களுக்கு திடீரென இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் நேரலை செய்து வரும் ஹாட்ஸ்டார் வலைதளம் திடீரென செயலிழந்தது.

கோபமடைந்த வீரர்கள்

கோபமடைந்த வீரர்கள்

அந்நிறுவனத்தின் செயலி மற்றும் வலைதளம் இரண்டுமே நீண்ட நேரமாக செயல்படாமல் முடங்கியது. ரசிகர்கள் தங்களது இணைய வசதிகளில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என குழம்பிவிட்டனர். இறுதியில் ஹாட்ஸ்டாரின் டொமைன் காலாவதியாகிவிட்டதாகவும், புதுப்பிக்க வேண்டியுள்ளதால் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

 ஜியோ செய்த உதவி

ஜியோ செய்த உதவி

இந்நிலையில் திடீரென ஜியோ நிறுவனம் உதவிக்காக வந்துவிட்டது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியை ஜியோ டிவி செயலியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அதுவும் எந்தவித சந்தா தொகையும் இல்லாமல் இலவசமாக முழு ஹெச்டி தரத்தில் போட்டிகள் ஒளிபரப்பாகின. இதனால் அனைத்து ரசிகர்களும் உடனடியாக ஜியோவின் பக்கம் திரும்பிவிட்டனர்.

 ஐபிஎல் நேரலை

ஐபிஎல் நேரலை

ஐபிஎல் 2023ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் ஆன்லைனில் ஒளிபரப்பும் உரிமையை ஜியோ தான் கைப்பற்றியுள்ளது. இந்த முறை ஸ்பெஷலாக ரசிகர்கள் விரும்பும் எந்த கேமிரா ஆங்கிளிலும் தேர்வு செய்து போட்டியை காணலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 17, 2023, 18:15 [IST]
Other articles published on Feb 17, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+