Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அஸ்வினுக்கு அப்போ தகுதி இல்லையா”.. சீண்டிப்பார்த்த ஹர்பஜன் சிங்.. வச்சு செய்யும் ரசிகர்கள்!

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்படலாம் எனக்கூறப்பட்டு வரும் சூழலில் ஹர்பஜன் சிங் கூறியுள்ள கருத்தால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுவிட்ட சூழலில் 3வது டெஸ்ட் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி கண்டு வந்தாலும், ரசிகர்களுக்கு தீராத கவலை ஒன்று உள்ளது. இதற்கு காரணம் கே.எல்.ராகுலின் மோசமான ஃபார்ம் தான். கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சொதப்பியுள்ளார்.

 கே.எல்.ராகுலின் நிலை

கே.எல்.ராகுலின் நிலை

கே.எல்.ராகுலை அணியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என குரல்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் துணைக்கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கிவிட்டது. இதனால் 3வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பதே சந்தேகமாகியுள்ளது. இதே போல துணைக்கேப்டன் யார் என்பதையும் இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.

 அடுத்த துணைக்கேப்டன் யார்?

அடுத்த துணைக்கேப்டன் யார்?

தற்போது உள்ள அணியில் ரோகித் சர்மாவுக்கு பின்னர் கேப்டன்சிக்கு தகுதியானவர்கள் என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் தான். குறிப்பாக அஸ்வினுக்கு கடினமான சூழல்களில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பது நன்கு தெரியும். மேலும் அவரின் ஃபார்ம் தற்போது மிகச்சிறப்பாக உள்ளதால் பல வேரியேஷன்களை முயற்சித்து பார்த்து வருகிறார்.

ஹர்பஜன் சிங் கருத்து

ஹர்பஜன் சிங் கருத்து

இந்நிலையில் இதுகுறித்து ஹர்பஜன் சிங் மறைமுகமாக தாக்கியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை துணைக்கேப்டன் என்பவர் ப்ளேயிங் 11ல் எப்போதுமே இடம்பிடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்தியா மற்றும் அயல்நாட்டு களங்கள் இரண்டிலுமே ஆட வேண்டும். அப்படி பார்த்தால் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வேண்டும். அவரிடம் நிறைய பொறுப்புகள் இருப்பதை நான் பார்த்துள்ளேன்.

 ஸ்பெஷல் திறமை

ஸ்பெஷல் திறமை

அணிக்கு சிறப்பான சீனியர் வீரரான ஜடேஜா, சிறப்பான கேப்டனாகவும் செயல்பட முடியும். உலகில் அவரை போன்ற ஒரு நல்ல ஆல் ரவுண்டர் கிடையாது. உள்நாடு மற்றும் அயல்நாடு என இரண்டு களங்களிலும் ஜடேஜாவுக்கு ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள், அஸ்வினும் ஜடேஜாவுக்கு நிகரான ஆல் ரவுண்டர் தான் என விமர்சித்து வருகின்றனர்.

Story first published: Sunday, February 26, 2023, 18:35 [IST]
Other articles published on Feb 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+