Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கெல்லாம் ஒயிடு தருவதா? வங்கதேச லீக்கில் நடந்த மோச சம்பவம்.. ஷகிப்அல் ஹசனை வச்சு செய்த ரசிகர்கள்

டாக்கா: பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் சகிப் அல் ஹசன் அம்பயரிடம் கடும் சண்டையில் ஈடுபட்ட சூழலில் அவர் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வங்கதேசத்தின் முன்னணி வீரரான சகிப் அல் ஹசன் சண்டையில் ஈடுபடுவது ஒன்றும் புதிதல்ல. ஸ்டம்ப்-ஐ உடைப்பது முதல் அம்பயரை அடிக்க செல்வது என அவர் மீது ஏகபோகத்திற்கு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அந்தவகையில் தான் நடப்பாண்டு வங்கதேச லீக் தொடரில் அம்பயர் ஒயிடு கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் நியாயம் உள்ள போதும் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

4வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய ஷகிபுல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தினார். ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து ஷகிபுல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார்.

கடும் ஆத்திரம்

கடும் ஆத்திரம்

அம்பயரின் இந்த முடிவால் கடும் ஆத்திரமடைந்த ஷகிப் அல் ஹசன், லெக் அம்பயரை பார்த்து ஏய், ஏய் என்று கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார். அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிப் அல் ஹசனிடம் காரணங்களை கூறி சமாளித்து அனுப்பி வைத்தனர். இது பேசுப்பொருளானது.

புதிய பிரச்சினை

புதிய பிரச்சினை

இந்நிலையில் சகிப்-க்கு எதிராக புதித்தாக ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு டாக்கா டாமினேட்டர்ஸ் மற்றும் குல்னா டைகர்ஸ் அணி மோதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் மெஹிடி ஹாசன் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை பேட்ஸ்மேன் கட் ஷாட் அடித்தார். இதனால் பந்து பேட்டில் இன்ஸைட் எட்ஜாகி கீப்பரிடம் உருண்டு சென்றது.

சுயநலம்

சுயநலம்

ஆனால் பேட்டில் பட்ட இந்த பந்திற்கு அம்பயர் மோசமாக வைட் கொடுத்தார். அப்போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் சகிப் தான் இருந்தார். அப்போது அது நியாயம் இல்லை என்று தெரிந்தும் அவர் குரல் எழுப்பவில்லை. தனக்காக நியாயம் நியாயம் என கத்தும் சகிப் அல் ஹசன், மற்றவர்களுக்கு நடக்கும் போது மட்டும் எதுவும் பேசாமல் நழுவி விடுகிறார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, January 10, 2023, 12:02 [IST]
Other articles published on Jan 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+