Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பேர் இரட்டை சதம்! மொத்தமாக 1640 ரன்கள்! கடைசியில் வெற்றிக்கு தேவையாக 11 ரன்கள்! திக்..திக் டெஸ்ட்

பிரிட்ஜ் டவுன் : இந்த டெஸ்ட் விறு விறுப்பாக நடைப் பெற்றது.ஓய்வு தினம் தவிர 6 நாட்கள் விளையாடப்பட்ட டெஸ்ட் இது. மூன்று இரட்டை சதங்கள்.
இரண்டு சதங்கள்.மூன்று வீரர்கள் காயங்கள் காரணமாக தொடர்ந்து விளையாட முடியவில்லை. ( ரிடையர்ட் ஹர்ட்)

ind vs nz cricket cricket history sports news

டெஸ்டில் மொத்த ரன்கள் 1640.மொத்த விக்கெட்டுக்கள்-25 , மே 1965. பிரிட்ஜ் டவுன் மைதானம். 4 வது டெஸ்ட்.முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய துவக்க வீரர்கள் பில் லாரியும், கேப்டன் பாப் சிம்ப்சன் இருவரும் சதங்கள் அடித்தனர், நாள் முழுவதும் ஆடினார்கள். பில் லாரி 102*, பாப் சிம்ப்சன் 137*அவர்களது அணி ஸ்கோர் 263.

இரண்டாவது நாள் இருவரும் இரட்டை சதங்கள் எடுத்தனர்.
முதலில் சிம்ப்சன் அவுட் ஆனார் 201 ரன்களுக்கு, வெஸ் ஹால் பந்தில். ஸ்கோர் 382.அடுத்து அவுட் ஆனவர் பில் லாரி 210 ரன்கள்.
சாலமன் வீசிய பந்தில் கேட்ச் பிடித்தவர் காரி சோபர்ஸ்.

பில் லாரி, பாப் கௌப்பர் உடன் ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு பார்னர்ட்ஷிப்பில் சேர்த்த ரன்கள் 140.
ஸ்கோர் 522 / 2இரண்டாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் பாப்
கௌப்பர் சதம் எடுத்தார். 102* , ஓநீல் 29*
ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர்
583 / 2.

மூன்றாம் நாள் ஆஸ்திரேலிய அணி வலுவான ஸ்கோரில் தங்களது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்ஹ் ஆடுவதை முடித்துக் கொண்டது. ஸ்கோர் 650 / 6 டிக்ளர். பாப் கௌப்பர் 102. ஓநீல் 51.
வெஸ் ஹால், லான்ஸ் கிப்ஸ் தலா 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

மூன்றாவது நாள் முடிவில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு விளையாடிக் கொண்டு இருந்தனர். ரோகன் கன்ஹாய் 80*, எஸ் நர்ஸ் 31*. ஸ்கோர் 165 / 2

4 ஆம் நாள் ஆட்டத்தில் ரோகன் கன்ஹாய் சதம் எடுத்தார். அவுட் ஆனார் 129 ரன்கள் எடுத்ததும்.கன்ஹாய், எஸ் நர்ஸ் ஜோடி பார்ட்னர்ஷிப்பில்
குவித்த ரன்கள் 200.அந்த நாள் முடிவில் ஸ்கோர் 424 / 3.
எஸ் நர்ஸ் 183*, கோனார்ட் ஹண்ட் 71*.அடுத்த தினம் ஓய்வு நாள்.

டெஸ்டின் 5 ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி அவர்களது இரண்டாவது இன்னிங்சின் பேட்டிங் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஸ்கோர் 139 / 2. பில் லாரி 58*, ஓநீல் 56*.முன்னதாக மேற்கு இந்திய தீவுக்கள் அணி முதல் இன்னிங்சில் 573 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனார்கள்.

எஸ் நர்ஸ் தனது இரட்டை சதத்தை எடுத்தார். (இந்த டெஸ்டின் 3 வது இரட்டை சதம் ) 201 ரன்கள். ஹாவ்க்கே வீசிய பந்தில் கேட்ச் பிடித்தவர் பாப் சிம்ப்சன்.கோனார்ட் ஹண்ட் 75கேப்டன் காரி சோபர்ஸ் 55. சார்லி கிரிஃபித் 54*பவுலிங்கில் ஆஸ்திரேலிய வேக பந்து பவுலர்கள் கிரஹாம் மெக்கின்சி 4, நீல் ஹாவ்க்கே 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

6 ஆம் நாள் டெஸ்டின் இறுதி நாள் ஆட்டம்.
ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை முடித்துக் கொண்டனர்.
ஆம். அவர்கள் டிக்ளர் செய்தனர்.
ஸ்கோர் 175 / 4. ஓநீல் 74* , பில் லாரி 58.( ரிடையர்ட் ஹர்ட்)
லான்ஸ் கிப்ஸ் 2 விக்கெட்டுக்கள்.

வெற்றி அடைய தேவையான 253 ரன்கள்
இலக்கை விரைந்து அடைய அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர், மேற்கு இந்திய தீவுக்கள் அணி ஓப்பன்னிங் ஜோடி கோணர்ட் ஹண்ட், பிரயன் டேவிஸ். முதல் விக்கெட்டிற்கு 145 ரன்கள் விரைவாக குவித்தனர். ஹண்ட் 81, டேவிஸ் 68. பேசில் புட்சர் 27, கேப்டன் காரி சோபர்ஸ் 34*.
டெஸ்ட் மேட்ச் முடிவில் மேற்கு இந்திய தீவுக்கள் அணி வெற்றி பெற தேவையாக.இருந்த ரன்கள் 11.

ஸ்கோர் 242 / 5 ஆட்டம் டிராவில் முடிவடைந்தது போதிய நேரம் இல்லாத காரணத்தினால்.

மெக்கின்சி, பீட்டர் பில்போட் தலா 2 விக்கெட்டுக்கள்.
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர்கள் ஹண்ட்##, ஹென்றிக்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பில் லாரி ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் பேட்டிங் தொடர முடியாமல் போயிற்று.
(## ஹண்ட் திரும்ப வந்து ஆடினார்.)

விக்கெட் கீப்பர் ஹென்றிக்ஸ் காயம் காரணமாக விளையாட முடியாதால் எஸ் நர்ஸ் விக்கெட் கீப்பிங் செய்தார்.
ஆஸ்திரேலிய வீரர் பாப் சிம்ப்சன், மேற்கு இந்திய தீவுக்கள் வீரர் எஸ் நர்ச் இருவரும் தலா எடுத்த ரன்கள் 201.

வாசுதேவன், பெங்களூரு

Story first published: Thursday, October 24, 2024, 13:34 [IST]
Other articles published on Oct 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+