வாங்கின பட்டாச பரண்ல வைக்க நாங்க என்ன பாகிஸ்தானா?... பேஸ்புக் கலகல!
சென்னை: இந்தியா, தென் ஆப்பிரிக்கா போட்டியை வைத்து பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் தென் ஆப்பிரிக்காவை குண்டக்க மண்டக்க வாரியுள்ளனர் பேஸ்புக் உபயோகிப்பாளர்கள்.
லேட்டஸ்ட் டிரண்டுகளை வைத்து வெளுத்து வாங்குவது பேஸ்புக்கின் பேஷனாகும். அந்த வகையில்,இப்போது இந்தியா - தென் ஆப்பிரிக்கா உலகக் கோப்பை போட்டி குறித்தும் ஏகப்பட்ட புகைப்பட கமெண்டுகள் களை கட்டி வருகின்றன.
விதம் விதமான புகைப்பட கமெண்டுகள் பேஸ்புக்கை கலக்கிக் கொண்டுள்ளன.
அதிலிருந்து சில...

வாங்கின பட்டாசை கொளுத்தாம!
இது ஒரு போஸ்ட்.. அதில் வாங்கின பட்டாச கொளுத்தாம பரண்ல வைக்க நாங்க என்ன பாகிஸ்தானா... நினனு நிதானமா திருப்பி அடிக்கிற இந்தியாடா என்று அதிரடியாக போட்டுள்ளனர். சூர்யா பட வசனத்தை உல்டா செய்துள்ளனர் இதில்.

டோணி இருக்கார்ல
இன்னொரு படம் இது... அதில், இந்தியாவிடம் ஸ்டெயின், மார்க்கல், பிலான்டர் போன்ற பவுலர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எம்.எஸ். டோணி இருக்கிறார் என்று டோணி புகழ் பாடியுள்ளனர் இதில்.

அதெல்லாம் கிடையாது.. பச்சையா இருந்தா அடிப்போம்!
இது செம காமெடியாக இருக்கிறது... டோணியும், ஏப் டிவில்லியர்ஸும் பேசிக் கொள்வது போல உள்ளது. டேய் நாங்க பாகிஸ்தான் இல்லடா, சவுத் ஆப்பிரிக்கா என்று கூறுகிறார் டிவில்லியர்ஸ்.. அதற்கு டோணியின் பதில் இது... அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. பச்சை சட்டை போட்டா நாங்க அடிப்போம்...பாகிஸ்தான் சீருடையும் பச்சை கலர் என்பது குறிப்பிடத்தக்கது.

அய்யா அது வேற யாரோ...!
இது பழைய கவுண்டமணி படக் காமெடி. ஷிகர் தவானை விமர்சித்ததை வைத்து காமெடி செய்துள்ளனர். அதில், கவுண்டமணி நம்பியாரிடம் சொல்கிறார்... (இந்திய ரசிகர்கள் ஷிகர் தவானை நோக்கி சொல்வது போல) அன்னிக்கு உன்னைத் திட்டுனது நாங்க இல்லப்பா.. அது வேற யாரோ....!

மாக்கா மாக்கா
இன்னொரு போஸ்ட்டில் மாக்கா மாக்கா விளம்பரத்தைக் கலாய்த்துள்ளனர். மாக்கா மாக்கா என்று கிண்டலடித்த இரு தென் ஆப்பிரிக்க வீரர்களையும், ஷிகர் தவான் கன்னத்தில் அடித்து கழுத்தைப் பிடித்து வெளியேற்றுவதைப் போல உள்ளது இந்தப் படம்.


Click it and Unblock the Notifications