Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யார் சொன்னா.. கிரிக்கெட்டே நடக்கலைன்னு.. இங்கே பாருங்க.. கலக்கறாங்க ஒவ்வொருத்தரும்

லண்டன்: விளையாட்டுப் போட்டிகள் முடங்கிப் போய் விட்டாலும் கூட விளையாட்டு உணர்வை முடக்க முடியாது. அதைத்தான் உலகம் முழுவதும் விளையாட்டுப் பிரியர்களும் சரி, விளையாட்டுத்துறையினரும் சரி உணர்த்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஏதாவது ஒரு வகையில் விளையாட்டுக்கள் உயிர்ப்போடு இருக்கத்தான் செய்கின்றன. காரணம் அது உணர்வோடு சம்பந்தப்பட்டது. மைதானத்துக்குப் போய்த்தான் விளையாட வேண்டும் என்று இல்லை தானே.. எனவேதான் சமூக வலைதளங்களில் விதம் விதமான விளையாட்டுக்களைக் காண முடிகிறது.

அதுகுறித்து ஒரு ரவுண்டப்பை இப்போது பார்ப்போம். உலகளவில் கால்பந்து, டென்னிஸ் போட்டிகளுக்குப் பிறகு அதிகம் ரசிகர்களைக் கொண்டது என்றால் அது கிரிக்கெட்தான். எனவே கிரிக்கெட் குறித்து பார்ப்போம்.

என்னா ஸ்டைல் ஷாட்

இதில் இருக்கும் குட்டிப் பையன் பெயர் ஆலிவர். இங்கிலாந்து நாட்டுக்காரப் பையன். 3 வயசு சுட்டிப் பையன். வீட்டு வளாகத்திற்குள் கிரிக்கெட் ஆடுகிறான். எப்படி ஸ்டைலா அடிக்கிறான் பாருங்க. அடிச்சுட்டு அந்த சவுண்டைப் பாருங்க. பக்கா வீரராக உருவெடுக்கிறான் இந்தக் குட்டிப் பையன். வருங்காலத்தில் பெரிய ஆட்டக்காரனாக மாறும் வாய்ப்புகள் அதிகம்தான் இந்தப் பையனுக்கு.

காரேஜ் கிரிக்கெட்

இது இன்னொரு குட்டிப் பையன். வீட்டு காரேஜ் போல இருக்கிறது. அங்கு நெட் கட்டி அதற்குள் கிரிக்கெட் ஆடுகிறான். பந்து வெளியிலும் போகாது. விளையாட்டுக்கும் இடையூறு வராது. எப்படியோ பொழுது போனால் போதும்.. அதிலும் இந்த கிரிக்கெட் பிரியர்களுக்கு பேட்டைக் கையில் எடுக்காமல் பொழுதே போகாது என்பார்கள். அதை இந்தப் பையன் நிரூபிக்கிறான்.

கமெண்டரியுடன் ஹால் கிரிக்கெட்

இதெப்படி இருக்கு.. வீட்டுக்குள்ளேயே கிரிக்கெட் ஆடுகிறார். பந்தை மைதானத்தில் தூக்கி அடிப்பதை போல அடிக்கிறார். அது எங்கு போச்சோன்னு தெரியலை.. ஆனால் பின்னணியில் ஒரு கமெண்டரியை ஓட விட்டிருக்கிறார். ஏதோ கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் மேட்ச் போலவே பீல் ஆகிறது. உண்மையிலேயே இதையெல்லாம் பார்க்கும்போது கொரோனா மேல கோபம் வரத்தான் செய்யுது.

தம்பி இன்னும் வளரணும்

ஆளு சைஸுக்கும் அந்த பேட் சைஸுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா பாருங்க. பேட் சைஸ் கூட இன்னும் வளராத இந்தக் குட்டிப் பையன் பந்தை வாங்கி அடிக்கும் ஸ்டைல் ரொம்பவே சூப்பர். இளம் வீரனாகவே இவன் நம்ம கண்ணில் தெரிகிறான். லாக்டவனில் வீடுகளை விட்டுத்தானே போகக் கூடாது. நாங்க இப்படி விளையாடி பொழுதைக் கழிப்போம்ல என்று இந்தச் சிறுவன் சொல்லாமல் சொல்லியுள்ளான்.

எங்கே ரோஜர் பெடரர்

ரோஜர் பெடரர் விட்ட டென்னிஸ் சவாலை இவர் கிரிக்கெட் பேட் கொண்டு சந்தித்துள்ளார் பாருங்க. சும்மா சொல்லக் கூடாது. சூப்பராக பந்தை அடிக்கிறார். அதுவும் லாவகமாக. பெடரருக்கே நிச்சயம் இது சவாலாகத்தான் இருக்க வேண்டும். உண்மையில் பெடரர் டிரை செய்தால் நிச்சயம் இந்த அளவுக்கு முழுமையாக அடிக்க முடியுமா என்பதும் சந்தேகம்தான். இதுதான் கிரிக்கெட் ஸ்பிரிட்டோ.

Story first published: Tuesday, April 14, 2020, 10:48 [IST]
Other articles published on Apr 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+