For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் இன்னிங்சில் டை ஆன இந்தியா மேட்ச்.. பிராட்மேன் அடித்த முச்சதம் கதை.. பல சுவாரஸ்ய தகவல்கள்

மும்பை : டெஸ்ட் மேட்சில் இரண்டு டீம்களின் ஸ்கோரும் சமமாக முடிந்தால், டிரா என்பதற்கு பதிலாக டை ( Tie ) ஆகியுள்ளது என்பார்கள்.இந்த டெஸ்டில் அந்த மாதிரி ஆனது முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்களில்.இரண்டு டீம்களும் முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் தலா 222.முதலில் ஆடிய மேற்கு இந்திய தீவுக்கள் டீமில் கேப்டன் ஜெர்ரி அலெக்சாண்டர் அதிக பட்ச ரன்கள் 70 எடுத்தார்.

இந்திய ஸ்பின் பவுலர் சுபாஷ் குப்தே 102 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.முதல் இன்னிங்சில் இந்திய டீமில் , அதிக ரன்கள் 57 பாலி உம்ரீக்கர் எடுத்தார்.மேற்கு இந்திய வேக பந்து பவுலர் வெஸ் ஹால் 50 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

cricket history - India and wi first innings score tied and don bradman triple century

இரண்டாவது இன்னிங்சில் காரி சோபர்ஸ் 198 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
மேற்கு இந்திய டீம் ஸ்கோர் 443 / 7 டிக்ளர்.இந்திய டீமின் நாரி கண்ட்ராக்டர் அதிக பட்சமான 50 ரன்கள் எடுத்தார்.எதிரணியின் வெஸ் ஹால் பவுலிங்கில் 5 - 75.
இந்திய டீம் ஆல் அவுட் 240, இரண்டாவது இன்னிங்சில்.மேற்கு இந்திய தீவுக்கள் டீம் இந்த 1958 ஆம் ஆண்டு கான்பூர் டெஸ்டை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த வேக பந்து வீசிய வீரர், இவரது அறிமுக முதல் தர மேட்சில் தரமான பந்து வீச்சால் அசத்தினார். வசந்த் ரஞ்சனே என்ற இந்த வீரர், மஹாராஷ்டிரா அணிக்காக விளையாடினார். 1956 - 57 ல் செளராஷ்டிராவிற் க்கு எதிரான மேட்சில் மொத்தம் 13 விக்கெட்டுக்கள்.

முதல் இன்னிங்சில் 9 - 35 ( ஹாட்ரிக் உள்பட ) & இரண்டாவது இன்னிங்சில் 4 - 36.இவரது அறிமுக டெஸ்டில் இவரால் எடுக்க முடிந்தது ஒரே ஒரு விக்கெட் தான். மற்ற 9 விக்கெட்டுக்களையும் ஸ்பின் பவுலர் சுபாஷ் குப்தே கை பற்றினார்.வசந்த் ரஞ்சனே, லான்ஸ் கிப்ஸ் விக்கெட்டை எடுத்தார், இவரது அறிமுக டெஸ்ட் ஆன 1958 ன் கான்பூர் மேட்சில்.

இவர் விளையாடியது 7 டெஸ்டுக்கள். 19 விக்கெடுக்கள் வீழ்த்தியுள்ளார்.
மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தின் 1962 ஆம் வருடம்
கிங்ஸ்டன் 5 வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 4 - 72 எடுத்தார்.
இவரின் பவுலிங்கிற்கு அவுட் ஆனவர்கள் கோனார்ட் ஹண்ட், ரோகன் கன்ஹாய், காரி சோபர்ஸ், பிராங்க் ஒர்ரேல், ஆகிய அனுபவ முன்னணி வீரர்கள்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த டெஸ்ட் மேட்சில் பின்வரும் ரன்களும் இடம் பெற்று இருந்தன.

0, 1 ,1 , 1, 1, 2 , 4, 5, 6, 8*, 10, 10,13, 14, 22, 22*, 24, 28, 29, 29, 30, 32, 33, 35, 44, 45, 50, 77..

இவற்றை தவிர 113, 334 ரன்கள்..

(** உபரி ரன்கள் )

ஆம் இந்த டெஸ்ட் மேட்சில் தான், டான் ப்ராட்மன் ஏற்படுத்திய உலக ரிக்கார்டான ஒரே நாளில் மூன்று சதம் அடிக்கப்பட்டது.இந்த சாதனை நிகழ்ந்தது 11 ஜூலை, 1930.
முதல் நாள் ஆட்டம் துவங்கி 11 பந்துக்கள் வீசப்பட்ட நிலையில் மைதானத்தில் விளையாட வந்த ப்ராட்மன் அன்று முழுவதும் ஆடினார்.ஆட்ட முடிவில் அவரது ஸ்கோர் 309*
அடுத்த நாள் அவுட் ஆனது 334 ரன்களுக்கு.டக் ஒர்த் கேட்ச் பிடிக்க, பந்து வீசியவர் டடே.

448 பந்துக்கள் எதிர் கொண்டார். 46 பவுண்டரிகள்.
முதல் நாள் லன்ச் இடைவேளையில் ப்ராட்மன் ஸ்கோர் 105* , தேனீர் இடைவேளையில் 220* மற்றும் நாள் முடிவில் 309*இதே டெஸ்டில் சதம் எடுத்த மற்றும் ஒரு வீரர் இங்கிலாந்து டீமின் வால்லி ஹம்மோன்ட்.361 பந்துக்கள் ஆடி 14
பவுண்டரிகள் உதவி யுடன் இவர் எடுத்த ரன்கள் 113.

லீட்ஸ் மைதானத்தில் விளையாடிய இந்த டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் 1908 முதல் 1930 வரையில் முதல் தர கிரிக்கெட் விளையாடினார். நடுவில் முதல் உலக மகா யுத்தத்தினால், கிரிக்கெட் விளையாட முடியவில்லை.61 டெஸ்டுக்கள் விளையாடிய ஸர் ஜாக் ஹாப்ஸ் 5410 ரன்கள் அடித்துள்ளார். 15 சதங்கள் சராசரி 56.94 ரன்கள்.முதல் தர கிரிக்கெட்டில் 61760 ரன்கள். 199 சதங்கள்.
சராசரி 50.70 ரன்கள்.

வாசுதேவன் , பெங்களூரு

Story first published: Wednesday, February 28, 2024, 0:00 [IST]
Other articles published on Feb 28, 2024
English summary
cricket history - India and wi first innings score tied and don bradman triple century முதல் இன்னிங்சில் டை ஆன இந்தியா மேட்ச்.. பிராட்மேன் அடித்த முச்சதம் கதை.. பல சுவாரஸ்ய தகவல்கள்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+