கிரிக்கெட்டின் உண்மையான டான்! பிராட்மேனின் முதல், கடைசி டெஸ்ட்டிவ் என்ன நடந்தது? சுவாரஸ்ய தகவல்கள்
Don Bradman : டான் ப்ராட்மன் டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் மற்றும் கடைசி தொடர்கள் பற்றி சில தகவல்கள்.1928- 29 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் பொழுது டான் ப்ராட்மனின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கியது.
1948 ஆம் வருடம் அவரது தலைமையில் சென்ற ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் விளையாடிய தொடருடன் ஸர் டான் ப்ராட்மனின் டெஸ்ட் சரித்திரம் முடிவுக்கு வந்தது. அவர் மொத்தம் விளையாடியது 52 டெஸ்டுக்கள்.

1928 - 29
முதல் டெஸ்ட்
பிரிஸ்பேன்
30- 11/ 05 -12/ 1928
அறிமுக டெஸ்ட்
ரன்கள் 18 1
இங்கிலாந்து அணி வென்றது
இரண்டாவது டெஸ்ட்
சிட்னி 14 - 20 / 12/ 1928
டான் ப்ராட்மன் நீக்கப்பட்டார்.ஆனால் 12 வது ஆட்டக்காரராக, சேர்க்கப் பட்டு மைதானத்தில் பீல்ட் செய்தார். 6 நாட்கள் டெஸ்ட் (ஓய்வு தினம் அல்லாது)
இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
மூன்றாவது டெஸ்ட்
மெல்போர்ன்
29/12/1928 - 05/01/1929
ரன்கள் 79 112
இங்கிலாந்து அணி வென்றதுஓய்வு நாள் தவிர்த்து 7 நாட்கள் இந்த டெஸ்ட் ஆடப் பட்டது.
நான்காவது டெஸ்ட்
அடிலெய்ட்
01- 02 / 08- 02/ 1929
ரன்கள் 40 58
இங்கிலாந்து அணி வென்றது ஓய்வு நாள் கணக்கில் சேர்க்காமல், இந்த டெஸ்ட் ஆடப் பட்ட நாட்கள் 7
ஐந்தாவது டெஸ்ட்
மெல்போர்ன்
08 - 16 / 03 / 1929
இந்த தொடரின் கடைசி டெஸ்டில், ஓய்வு தினம் ( Rest Day) தவிர்த்து விளையாடப் பட்ட நாட்கள் 8.
ரன்கள் 123 37 *
ஆஸ்திரேலிய அணி வென்றது.
ஸர் டான் ப்ராட்மனின் கடைசி தொடர்.
முதல் டெஸ்ட்
நாட்டிங்காம்
10 - 15 / 06 /1948
ரன்கள் 138 0
ஆஸ்திரேலிய அணி
வெற்றி.
இரண்டாவது டெஸ்ட்
லார்ட்ஸ்
24 - 29 / 06 / 1948
ரன்கள் 38 89
ஆஸ்திரேலிய அணி வென்றது.
மூன்றாவது டெஸ்ட்
மன்செஸ்டர்
08 - 13 / 07 / 1948
ரன்கள் 7 30 *
மேட்ச் டிராவில் முடிந்தது.
நான்காவது டெஸ்ட்
லீட்ஸ்
22 - 27 / 07 / 1948
ரன்கள் 33 173 *
வெற்றி அடைந்தது
ஆஸ்திரேலிய அணி.
ஐந்தாவது டெஸ்ட்
ஓவல்
14 - 18 / 08 / 1948
ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டும் தான் பேட்டிங் விளையாடியது.
இங்கிலா ந்து அணி முதல் இன்னிங்சில் எடுத்த ரன்கள் 52. 5 ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்கவில்லை.ஆஸ்திரேலிய வேக பந்து வீசும் ரே லின்ட்வால் பவுலிங்கில் அசத்தினார். 6 - 20.இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஸ்கோர் 188.
நான்கு நாட்களில் டெஸ்ட் முடிந்தது.நான்கு ரன்கள் எடுத்து இருந்தால், ஒரு மாபெரும் சரித்திரம் படைத்து இருப்பார்.பெரிதும் எதிர் பார்க்க பாட் ஸர் டான் ப்ராட்மன்,
அவரது இந்த கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் எதிர் கொண்டது இரண்டே பந்துக்களை.
அவரது விக்கெட்டை வீழ்த்தி ( க்ளீன் போல்ட் ) கிரிக்கெட் டெஸ்ட் சரித்திரத்தில் அவருடன் இடம் பிடித்தவர், இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலர் எரிக் ஹோலீஸ் ( Eric Hollies )
ஸர் டான் ப்ராட்மன், ரன் எதுவும் எடுக்கவில்லை.இந்த டெஸ்டிலும் வெற்றிக் கொண்ட ஆஸ்திரேலிய அணி, தொடரை 4 - 0 என்ற கணக்கில் வென்று சரித்திரம் படைத்தது.
1928 ல் அறிமுக டெஸ்டில் 18 ரன்கள் எடுத்த டான் ப்ராட்மன், கடைசி டெஸ்டில் 0 ரன்னுடன் முடித்தார்.இவரது முதல் அறிமுகடெஸ்ட் விக்கெட்டை எடுத்தவர் இங்கிலாந்து அணி பவுலர் டடே.
கடைசி விக்கெட் எடுத்த எரிக் ஹோலீஸ், 1948 ஆம் ஆண்டு அந்த தொடரில் விளையாடிய முதல் டெஸ்ட், ப்ராடமனின் கடைசி டெஸ்ட் ஆக அமைந்தது.இந்த டெஸ்டில்
ஹோலீஸ் சிறப்பாக பந்து வீசினார். 5 - 131.
20 வது வயதில் டெஸ்ட் விளையாட துவங்கி ( 1928 ) 40 வயது வரை( 1948 ) டெஸ்ட்டுக்கள் ஆடி ப்ராடமன் அசத்தினார்ப்ராடமன் அறிமுகம் ஆகிய அதே பிரிஸ்பேன் டெஸ்டில் ( 1928 ) அறிமுகம் ஆன இடது கை வீரர் பெர்ட் ஐயன் மோங்கர் ( Bert Ironminger ).
இவர் அறிமுகம் ஆன பொழுது இவரது வயது கிட்டத்தட்ட 46 வருட ங்கள்.
14 டெஸ்டுக்கள் விளையாடிய இவர் 74 விக்கெடுக்களை வீழ்த்தினார்.
1933 ஆம் வருடம் சிட்னி டெஸ்டில் கடைசியாக விளையாடிய பொழுது இவரது வயது 50.
இவர் முதல் தர கிரிக்கெட் 53 வயது வரையில் விளையாடினார்.
பெர்ட் ஐயன் மோங்கர் அறிமுக டெஸ்டின் முதல் இன்னிங்சிலும், கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சிலும் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
ஒரு டெஸ்டில் இவர் பவுலிங்கில் எடுத்தது
11 - 24
இவரது அறிமுக மற்றும் கடைசி டெஸ்டுகளில், டான் ப்ராடமன் விளையாடி உள்ளார்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆலன் ரே ( Allan Rae ) என்ற இடது கை
ஓபனிங் பேட்ஸ்மன் மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்காக டெஸ்டுக்கள் விளையாடியவர்.
இந்திய அணிக்கு எதிராக டெல்லி டெஸ்டில் (1948 ) தனது அறிமுக டெஸ்ட் ஆடினார்.
எடுத்த ரன்கள் 8. மேட்ச் டிராவில் முடிந்தது.
ஆனால் இந்த டெஸ்டில் மொத்தம் 5 சதங்கள்.
ஒரே இன்னிங்சில் நான்கு.
கிளைடி வால்காட் 152 *
கெரி கோம்ஸ் 101
எவேர்ட்டன் வீக்ஸ் 128
ராபர்ட்
கிறிஸ்டியானி 107
ஹேமு அதிகாரி 114 *
15 டெஸ்டுக்கள் ஆடிய
ஆலன் ரே , நான்கு சதங்கள் எடுத்துள்ளார்.
இரண்டு சதங்கள் இந்திய அணிக்கு எதிராகவும், இரண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராகவும். 1016 ரன்கள். 46.18 சராசரி ரன்கள்.நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்டில் 99 ரன்களில் அவுட் ஆனார்.பாரிஸ்டர் தொழிலை தொடர, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தார்.
கிரிக்கெட் மீது இருந்த ஆர்வத்தினால் சிறந்த போர்டு உறுப்பினர் மற்றும் தலைவராகவும் திகழ்ந்தார்.இவரது தந்தை எர்னெஸ்ட்டும் கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர்.
ரேயின் கடைசி டெஸ்ட் மேற்கு இந்திய தீவுக்கள் மண்ணில் , போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைப் பெற்றது 1953 ஆம் வருடம்.இந்த டெஸ்டிலும், இவர் பேட்டிங் ஆடியது ஒரே ஒரு இன்னிங்சில் மட்டும்.
இவர் எடுத்த ரன்கள் 15.மேற்கு இந்திய வேக பந்து பவுலர் பிராங்க் கிங், இந்திய சுழல் வீச்சு பவுலர் சுபாஷ் குப்தே ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
பிராங்க் கிங் 5 - 74
சுபாஷ் குப்தே 5 - 107
மூன்று சதங்கள்
எவேர்ட்டன் வீக்ஸ் 161
மாதவ் அப்தே 163 *
ஜெப்ரி
ஸ்டாலிமெயர் 104 *
வினு மங்காட் 96 ரன்களில், ரன் அவுட் ஆனார். டெஸ்ட் மேட்ச் டிராவில் முடிந்தது.
ஆலன் ரே டெஸ்டுகளில் மொத்தம் 4 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
அவரது டெஸ்ட் சதங்கள். இந்தியா 104 பம்பாய் ( இன்றைய மும்பை ) 1948
109 மெட்ராஸ் (இன்றைய சென்னை ) 1949
106 லார்ட்ஸ் 1950
109 ஓவல் 1950
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications