405 ரன்களில் ஆல் அவுட் ஆனது இந்தியா-டெண்டுல்கர் 98

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் டிராவிட், சுரேஷ் ரெய்னா ஆகியோரும் சிறப்பாக ஆடி இந்தியாவின் ரன் குவிப்பில் பங்கு வகித்தனர்.
மொஹாலியில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியா வுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 428 ரன்களைக் குவித்து ஓய்ந்தது.
இதையடுத்து இந்தியா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. வீரேந்திர ஷேவாக் அதிரடியாக ஆடி அரை சதம் போட்டார். 54 பந்துகளைச் சந்தித்த அவர் 59 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டிராவி்ட் ரன் குவிப்புப் பொறுப்பை கையில் எடுத்தார். சிறப்பாகவும், நிதானமாகவும் ஆடிய அவர் 77 ரன்களைக் குவித்து போலிஞ்சர் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு ஜோடி சேர்ந்தனர் சச்சினும், ரெய்னாவும். இருவரும் இணைந்து படு நேர்த்தியாக ஆடினர். இவர்களைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலியா கடுமையாக திணறியது.
சச்சின் டெண்டுல்கர் சிறப்பாக ஆடினார். 98 ரன்கள் எடுத்த நிலையில் அவர் சதமடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக நார்த் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார் சச்சின்.
மறுபக்கம் ரெய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடினார். அவராவது சதமடிப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரெய்னா 86 ரன்களில் ஆட்டமிழந்தார். சச்சினும், ரெய்னாவும் இணைந்து 124 ரன்களை சேர்த்தனர்.
சச்சின், ரெய்னா போன பின்னர் இந்தியா சரிவைச் சந்தித்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோணியும், லட்சுமணும் ஏமாற்றினர். இதனால் இந்தியா 405 ரன்களில் ஆல் அவுட் ஆகி விட்டது. இது ஆஸ்திரேலியாவை விட 23 ரன்கள் குறைவாகும்.
நாளை ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸைத் தொடங்குகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:41 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications