டோணி மனைவி நேரில் வந்து பார்த்த முதல் போட்டியிலேயே இந்தியா படு தோல்வி

இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டி நேற்று இலங்கையின் தம்புல்லா நகரில் நடந்தது. இப்போட்டியில் மகா மோசமாக ஆடிய இந்தியா 88 ரன்கள் மட்டுமே எடுத்து 200 ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியைச் சந்தித்தது.
முன்னதாக ஆடிய நியூசிலாந்து அணி 288 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆனால் நியூசிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் வெறும் 88 ரன்களை மட்டுமே எடுத்து சுருண்டது இந்தியா.
29.3 ஓவர்களிலேய இந்தியாவின் கதையை முடித்து வைத்து விட்டது நியூசிலாந்து. கேப்டன் டோணி வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் அவுட் ஆனார். அணியிலேயே அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே. இவர் சேர்த்தது 20 ரன்கள். திணேஷ் கார்த்திக் 14, ஷேவாக் 19 என மேலும் இருவர் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டனர். மற்றவர்கள் எல்லாம் சிங்கிள் டிஜிட்டுடன் இந்தியாவுக்குத் தோல்வியைத் தேடித் தந்தனர்.
இந்தப் போட்டியை நேற்று டோணியின் மனைவி சாக்ஷி சிங் நேரில் கண்டு களித்தார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் நேரில் பார்க்கும் முதல் போட்டி இது. ஆனால் முதல் போட்டியிலேயே இந்தியா படு தோல்வி அடைந்ததும், டோணி 2 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனதும் சாக்ஷியை அதிர வைத்து விட்டது.
போட்டியின் பாதியிலேயே கிளம்பிப் போய் விட்டாராம் பெரும் சோகத்துடன்.
நேரில் வந்து பார்த்த முதல் போட்டியிலேயே இந்தியா கேவலமான தோல்வியை சந்தித்துள்ளால் சாக்ஷியை ராசியில்லாதவர் என கூறத் தொடங்கி விட்டனர் குசும்பர்கள்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications