2வது ஒரு நாள் போட்டி-நியூசிலாந்து 258 ரன்கள் குவிப்பு
ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் இன்று நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.
இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடந்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் குப்டில் 70 ரன்கள் குவித்தார். அவருக்கு அடுத்து ஸ்டைரிஸ் அதிரடியாக ஆடி 59 ரன்களைக் குவித்தார். கேப்டன் வெட்டோரி தன் பங்குக்கு 32 பந்துகளில் 31 ரன்களைச் சேர்த்தார். முன்னணி பேட்ஸ்மேன்கள் கைவிட்ட நிலையில் பின்னால் வந்தவர்கள் சுதாரித்து ஆடியதால் நியூசிலாந்து 258 ரன்களைக் குவிக்க முடிந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications