அதிக எண்ணிக்கையிலான போட்டிகள்-குறைக்கக் கோரி கிரிக்கெட் வீரர்கள் முறையீடு

இந்திய கிரிக்கெட் அணியின் அத்தனை வீரர்களும் ஒருபோதும் நல்ல உடல் நிலையுடன், ஸ்திரமான நிலையில் இருந்ததே இல்லை. எந்தத் தொடராக இருந்தாலும் முன்னணி வீரர்கள் யாருக்காவது முடியாமல் போய் விடும். அதுவும் கிளம்பிப் போன உடனேயே கால் வலி, கை வலி, முதுகு வலி, இடுப்பு வலி என ஏதாவது வலி வந்து ஊருக்குத் திரும்புவது வழக்கம்.
தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதும், அதிக போட்டிகளில் கலந்து கொள்வதும், பிட்னஸ் குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டாததுமே இதற்குக் காரணம்.
இந்த நிலையில் இலங்கை போயுள்ள இந்திய அணியினர் போட்டிகளைக் குறைக்குமாறு கடிதம் அனுப்பும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்திய அணி இலங்கையில் நடைபெறும் முத்தரப்புத் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆனால் அதற்கு முன்புதான் இலங்கையுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அடுத்தடுத்து மோதியது.
முத்தரப்புத் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்திடம் 200 ரன் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது. அடுத்த போட்டி ஆகஸ்ட் 16ம் தேதிதான். இதற்கு இடைப்பட்ட இடைவெளியில் இந்தியாவுக்கு வந்து போக அனுமதி கோரி கிரிக்கெட் அணியினர் கோரினர். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து அதிக போட்டிகளில் விளையாடுவது குறித்து அணியின் முக்கிய வீரர்கள் 7 பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனராம். இதுதொடர்பாக இவர்கள்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் அனுப்பி, அதிக அளவிலான போட்டிகளை ஒப்புக் கொள்ள வேண்டாம் என கோரியுள்ளனராம்.
இந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்துடன் நடைபெறவுள்ள 3 டெஸ்ட் கொண்ட தொடரை, 2 டெஸ்ட் தொடராக மாற்றுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மூலம் சற்று ஓய்வு கிடைக்கும் எனவும், அது, தொடர்ந்து வரும் தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது சவுகரியமாக இருக்கும் எனவும் வீரர்கள் கோரியுள்ளனராம்.
அதேபோல வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்துமாறும் கோரியுள்ளனராம். ஆனால் அதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை என்று தெரிகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications