Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சச்சின், டோணி, சிறப்பான சீரான ஆட்டம்-இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்குமா இந்தியா?

செஞ்சுரியன்: தென் ஆப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க இந்தியா கடுமையாக போராடி வருகிறது. சிறப்பாக ஆடிய சச்சினும், டோணியும் அரைசதம் போட்டு அணியை மீட்க போராடி வருகின்றனர்.

செஞ்சுரியன்பார்க்கில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸை 136 ரன்களுக்கு பரிதாபமாக இழந்தது இந்தியா. இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா, இந்தியாவின் பந்து வீச்சை தவிடுபொடியாக்கி 620 ரன்களைக் குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா தொடர்ந்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.

கம்பீர், ஷேவாக் கடுமையாக போராடி அரை சதம் போட்டனர். கம்பீர் 80 ரன்களும், ஷேவாக் 63 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிராவிட் மிக மிக நிதானமாக ஆடி 43 ரன்களை எடுத்தார். இஷாந்த் சர்மா 23 ரன்கள் சேர்த்தார்.

தற்போது சச்சினும், டோணியும் ஆடிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் சிறப்பாகவும், சீராகவும் ஆடி வருகின்றனர். இருவரும் அரை சதத்தைத் தாண்டி ரசிகர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் விளையாடி வருகின்றனர்.

ஆறு மணி நிலவரப்படி இந்தியா 6விக்கெட்இழப்புக்கு 375 ரன்கள் எடுத்திருந்தது. சச்சின் 66 ரன்களும், டோணி 68ரன்களும் எடுத்திருந்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+