முத்தரப்பு தொடருக்கான அணியில் சச்சின், ஹர்பஜன், கம்பீர் இல்லை
டெல்லி: இந்தியா, இலங்கை, நியூசிலாந்து இடையிலான முத்தரப்புத் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், கெளதம் கம்பீருக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. அஷவின், செளரப் திவாரி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை முடித்த பின்னர் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில் 3வது அணியாக நியூசிலாந்து கலந்து கொள்கிறது.
இந்த தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இளம் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஷ்வின் மற்றும் செளரப் திவாரிஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எமர்ஜிங் பிளேயர்ஸ் தொடரில் அஷ்வின், திவாரிக்குப் பதில் அசோக் தின்டா மற்றும் மனீஷ் பான்டே ஆகியோர் விளையாடுவார்கள்.
முத்தரப்புத் தொடருக்கான அணி
டோணி, வீரேந்திர ஷேவாக், விராத்கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், ரவீந்திர ஜடேஜா, திணேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், பிரவீன் குமார், இஷாந்த் சர்மா, அபிமன்யூ மிதுன், ஆசிஷ் நேஹ்ரா, பிரக்யான் ஓஜா, செளரப் திவாரி.


Click it and Unblock the Notifications