டெஸ்ட் தொடர்-இந்திய கிரிக்கெட் அணி நாளை இலங்கை பயணம்
சென்னை: இலங்கையுடனான டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் நாளை சென்னையிலிருந்து கொழும்பு செல்கின்றனர்.
புதிதாக மணம் புரிந்து கொண்டுள்ள கேப்டன் டோணி மட்டும் நாளை அணியினருடன் போக மாட்டார். அவர் தனியாக நேரடியாக கொழும்பு செல்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 18ம் தேதி முதல் இந்த தொடர் தொடங்குகிறது. இலங்கை பயணத்திற்காக வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அபிமன்யூ மிதுன் ஆகியோர் சென்னை வந்து சேர்ந்து விட்டனர். சச்சின் டெண்டுல்கர் மாலையில் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை வி்மானத்தை அவர் தவற விட்டு விட்டதால் இன்று இரவு வாக்கில் அவர் வரலாம் எனத்தெரிகிறது.
வட இந்தியாவைச் சேர்ந்த பிற வீரர்களான ஷேவாக், கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோர் ஒவ்வொருவராக வரவுள்ளனர்.
நாளை இரவு 10.30 மணிக்கு செல்லும் இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் இவர்கள் கொழும்பு பயணிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications